Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, January 10, 2023

இந்தச் செடியை கண்டால் விட்டுவிடாதீர்கள்!! உச்சி முதல் பாதம் வரையுள்ள அனைத்து நோய்களுக்கும் இந்த ஒரு செடியை போதும்!


பலரது வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் இந்த ரணகள்ளி செடியில் நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.வெற்றிலை துளசி கற்பூரவல்லி போன்றே இந்த ரணகளையும் ஒரு முக்கியமான மூலிகை செடி ஆகும்.இந்த ரணகள்ளி செடியின் இலையானது பசை போன்ற திரவத்தை கொண்டுள்ளது.இந்த இலையானது அமிலத்தன்மையுடனும் உவர்ப்பு தன்மையுடனும் சுவை கொண்டு இருக்கும்.டேபிள் ரோஸை போன்றே இந்த ரணக்கள்ளி செடியின் இலை வேர் தண்டு போன்று எதை வைத்தாலும் எளிதில் வேர் பிடித்து வந்துவிடும்.ஆயுர்வேதத்தில் இது எந்த நோய்க்கு எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மலச்சிக்கல் :

ரணகள்ளி இலைகளை பறித்து நிழலில் உலரவைத்து அதனை பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியில் தேநீர் தயாரித்துக் குடித்து வந்தால் மலச்சிக்கலில் இருந்து முழுமையாக குணமடையலாம்.

கண் வலி :

புதிய இலைகளை எடுத்து அதன் சாற்றை பிழிந்து,அந்த சாறெடுத்து கண்களை சுற்றி தடவினால் கண் வலி நீங்கும்.

காயங்கள் :

காயங்கள் உண்டாகும் போது இந்த ரணகள்ளி இலைகளை எடுத்து சிறிது சூடாக்கி அதனை நசுக்கி காயமுள்ள இடத்தில் கட்டு போட்டால் காயம் விரைவில் குணமாகும்.
சிராய்ப்பு காயம் உள்ளவர்கள் இந்த இலையின் சாற்றை எடுத்து தடவினாலே போதும் காயங்கள் விரைவில் குணமாகும்.

வயிற்றுப்போக்கு :

வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் ரணகள்ளி இலையின் சாற்றை எடுத்து அதில் சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

வெள்ளைப்படுதல் :

வெள்ளைப்படுதல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த இலையில் கசாயம் வைத்து இரண்டு வேளை குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனை சற்றென்று குணமாகும்.

காய்ச்சல் :

ரணகள்ளி சாற்றை குடித்து வந்தால் காய்ச்சல் தணியும். இந்த இலையில் அதிக அளவில் எதிர்ப்பு சக்தி காரணிகள் உள்ளதால் காய்ச்சலை சரி செய்யும்.

சரும வீக்கம் குறைய :

சருமத்தில் அலர்ஜியினால் ஏற்படும் வீக்கங்கள் குறைய, ரணகள்ளி இலைகளை கசக்கி அல்லது அதனை அரைத்து வீக்கம் உள்ள இடத்தில் தடவி வந்தால் குணமடையும்.

மூலநோய் :

இந்த இலையின் சாற்றை இரண்டு வேளை குடித்து வந்தால் மூலநோய் பிரச்சினையிலிருந்து விரைவில் விடுபடலாம்.

கல்லீரல் :

மஞ்சகாமாலை உள்ளவர்கள் இந்த இலையின் சாற்றை எடுத்துக் கொண்டால் நல்ல பலனை தரும் மேலும் கல்லீரல் செயல்பாட்டையும் இது அதிகரிக்கும்.

காதுவலி :

கடுமையான காது வலியால் அவஸ்தை படுபவர்கள்
சில துளிகள் ரணகள்ளி சாறை காதில் விட்டால் காதுவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

நீரிழிவு :

ரணகள்ளி இலை நீரிழிவு நோய்க்கும் நல்ல மருந்தாக விளங்குகிறது.

முகப்பரு :

இந்த இலையின் சாற்றை முகப்பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் முகப்பருவினால் ஏற்படும் சிறிது வீக்கம் மற்றும் சிவப்பு நிறம் குறையும்.மேலும் விரைவில் முகப்பருவையும் குணப்படுத்த உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தி :

ரணகள்ளி உலர்ந்த இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரை இரண்டு அல்லது மூன்று முறை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது ஃப்ரி ரேடிக்கல்களை சிறப்பாக எதிர்த்து போராட உதவும்.

வயிற்று வலி :

வயிற்று வலியால் அவதிப்படுவோர் இந்த இலையில் கசாயத்தை செய்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

No comments:

Post a Comment