JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

35 வயதை கடந்த பலரும் சந்திக்கக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனை என்னவென்றால் அது மூட்டு வலி என்றே கூறலாம்.மூட்டு வலி பெரும்பாலும் எலும்பு தேய்மானம்,வேலை பளு,முறையற்ற உணவு பழக்க வழக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது.மூட்டு வலிக்காக பல்வேறு மருத்துவமனைகள் ஏறி இறங்கியும், பலவகை மாத்திரை மருந்துகளை உட்கொண்டும் தீர்வு கிடைக்கவில்லையா?இதை ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
தோல் உரித்த பூண்டு இரண்டு பல்
கற்றாழை சாறு இரண்டு டீஸ்பூன்
மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
விளக்கெண்ணெய் சிறிதளவு.
செய்முறை
முதலில் பூண்டை நன்றாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டு ஸ்பூன் கற்றாழை சோறு எடுத்து அதில் இடித்து வைத்த பூண்டு மற்றும் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை கலந்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு கலக்கவும்.
பின்பு மூட்டு வலி உள்ள இடத்தில் சிறிதளவு விளக்கெண்ணெய் தேய்த்து விட்டு பிறகு செய்து வைத்த பேஸ்டை தடவ வேண்டும்.
இதைத் தடவிய உடன் சிறிது நேரத்திலேயே வலி குறைவதை காணலாம் இதனை அடிக்கடி தடவி வந்தால் மூட்டு வலியில் இருந்து முற்றிலும் நிவாரணமும் பெறலாம்.
'
குறிப்பு:
இந்த பேஸ்ட்டை தடவிய பிறகு அது காயும் வரை நடக்கக்கூடாது.
கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தக் கூடாது.கற்றாழை மடலில் இருந்து தான் அதன் ஜெல்லை எடுக்க வேண்டும்.
பூண்டு பல் சிறிதாக இருந்தால் நான்கு பற்களை எடுத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment