Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, January 2, 2023

இந்த அறிகுறிகள் இருந்தால் ,உங்க கிட்னியில் கல் இருக்குனு அர்த்தம் .

நமது வாழ்க்கை முறை மாற்றத்தால் கிட்னியில் கற்கள் உருவாவது இப்போது பெரும்பாலானோருக்கு உண்டாகிறது .அந்த கற்கள் சிறியதாக இருந்தால் அது யூரின் வழியாக வெளியே வந்து விடும் .அதுவே 3 மிமி ருக்கு மேல் இருந்தால் அதை வெளியேற்ற ஆயுர்வேத சிகிச்சைகள் உள்ளது .ஆங்கில மருத்துவத்தில் அதை அறுவை சிகிச்சை செய்து தான் எடுக்க வேண்டும் .அதனால் கிட்னி கல் வந்தபின்னர் அவஸ்த்தை படுவதை விட வரும் முன் காப்பதே சிறந்த வழி .அப்படி வந்து விட்டால் சில உணவு கட்டுப்பாடு மூலம் சரி செய்யலாம் மாதுளை, சப்போட்டா, பெருநெல்லி, கறுப்பு திராட்சை, உலர் கறுப்பு திராட்சை, அனைத்துச் சிட்ரஸ் வகைப் பழங்கள் இந்த கற்கள் வராமலும் தடுக்கும் ,மேலும் இளநீருடன் (200 மி.லி.) சிறிது ஏலக்காய் சேர்த்துத் தினசரிக் குடித்துவந்தால் கல் கரையும்.

பெருநெல்லி சாற்றைத் தேனுடன் சேர்த்துத் தினசரிக் காலை சாப்பிட்டால் பயன் கிடைக்கும்.


அறிகுறிகள் :

பின்பக்க விலாவில் வலி அல்லது முதுகுவலி, ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கத்திலும் அதிகரிக்கும் வலி

குமட்டல், வாந்தி

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

சிறுநீர் அளவு அதிகரித்தல்

சிறுநீரில் இரத்தம் காணப்படுதல்

அடிவயிற்றில் வலி

வலியோடு கூட சிறுநீர் கழித்தல்

இரவு நேரத்தில் அதிக அளவு சிறுநீர் கழித்தல்

ஆணின் முதன்மை இனப்பெருக்க உறுப்பில் (டெஸ்டிகல்) வலி
சிறுநீரின் நிறம் இயற்க்கைக்கு மாறாக காணப்படுதல்

No comments:

Post a Comment