SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL

Subscribe Us

Monday, January 2, 2023

வரும் 6-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! வெளியான புதிய அறிவிப்பு.! முழு விவரம் உள்ளே.!

ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 6-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவிடுவது வழக்கம். தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அந்த விடுமுறை தினங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். அந்த வகையில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 06.01.2023 தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மாவட்ட ஆட்சியர் தனது அறிவிப்பில்; ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, வரும் 6-ம் தேதி வியாழன்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு பதில் 21.01.2023 சனிக்கிழமை அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment