JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
இளநிலையில் இருந்து முதுநிலைஆராய்ச்சியாளர் உதவித் தொகைபெற யுஜிசி அனுமதி பெற தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, யு.ஜி.சி செயலர் ரஜ்னிஷ் ஜெயின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:அறிவியல், மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்வோருக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவோர், முதுநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கான நிபந்தனைகளில் தளர்வு அளிக்கப்படுகிறது. அதன்படி, தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகை பெறுவோர், தனது துறை அல்லது பல்கலைக்கழகம் வாயிலாக முதுநிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
அவ்வாறு விண்ணப்பிப்போரின் ஆராய்ச்சியை மதிப்பீடு செய்ய கண்காணிப்பாளர், துறைத் தலைவர் மற்றும் வெளியில் இருந்து பாட நிபுணர் ஒருவர் என மூவர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். அவர்கள் ஆராய்ச்சியை மதிப்பிட்டு, அது தொடர்பான பரிந்துரைகளை யுஜிசிக்கு அனுப்பி வைத்தால் போதுமானது. இதற்கு யுஜிசி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. இதையடுத்து விண்ணப்பதாரர் முதுநிலை உதவித் தொகை பெற தகுதியுடையவராவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment