Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, January 22, 2023

கண் பார்வையை பிரச்னை தீர... ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவு பொருள்கள் - இதோ!

வீட்டில் இருந்தே வேலை செய்வது, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் என நாம் செல்போன், கணினி, லேப்டாப் போன்ற சாதனங்களை பார்க்கும் நேரம் அதிகமாகிவிட்டது.

கொரோனா தொற்றுநோய் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். இதனால், சில நன்மைகள் இருந்தாலும், அது நமது கண்களில் ஒரு தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், கண்பார்வையை மேம்படுத்த உடற்பயிற்சி செய்வது, திரையைப் பார்க்கும் போது கண்ணாடி அணிவது மற்றும் வழக்கமான கண் பரிசோதனைகள் செய்வது ஆகியவை மிக மிக முக்கியம்.

சரியான உணவு மற்றும் பானங்கள் மூலம், நீங்கள் கண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். ஆயுர்வேத நிபுணர்கள் கண் பராமரிப்புக்காக பல ஆரோக்கியமான உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கின்றனர்.

கண் பார்வையை மேம்படுத்தும் உணவுகளின் பட்டியல்

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. விழித்திரை செல்களை பராமரிப்பதிலும், ஆரோக்கியமான நுண்குழாய்களை மேம்படுத்துவதிலும் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது.

தேன்

கண்கள் ஆரோக்கியமாக இருக்கவும், வெளிச்சம் அதிகரிக்கவும் தினமும் தேனை உட்கொள்ள வேண்டும். இது இயற்கையான இனிப்பை வழங்குகிறது. இது உங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் உங்கள் கண்பார்வையை மேம்படுத்துகிறது.

பாதாம்

பாதாமில் வைட்டமின் ஈ உள்ளது. இது உங்கள் மூளையை கூர்மையாக்குவது மட்டுமல்லாமல் உங்கள் கண்களுக்கும் நன்மை பயக்கும். வைட்டமின் ஈ கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மாகுலர் சிதைவை மெதுவாக்க உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

திரிபலா பொடி

திரிபலா பொடியை நெய் மற்றும் தேனுடன் சம அளவு கலந்து இரவில் உட்கொள்வது கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

குங்குமப்பூ

குங்குமப்பூமிகவும் விலையுயர்ந்த பொருட்களில் ஒன்றாகும். இது பல விஷேச நிகழ்ச்சிகளில் செய்யப்படும் உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் அதை 2 முதல் 3 நாட்கள் இடைவெளியில் உட்கொள்ளலாம். இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது உங்கள் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. உடலின் ரத்த அணுக்களை அதிகரிக்கிறது. இது தவிர, இது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

கல் உப்பு

கண்களுக்கு நல்ல உப்பு எதுவென்று கேட்டால், கல் உப்பு மட்டுமே. எனவே, கல் உப்பை சமையலில் அதிகம் பயன்படுத்துவதால் கண்பார்வை மேம்படும்.

மஞ்சள்

மஞ்சள் உங்கள் கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் குர்குமின் உறுப்பு உள்ளது. இது ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதனை உட்கொள்வதன் மூலம் கண் வறட்சி பிரச்சனை வராமல் தடுக்கலாம்.

No comments:

Post a Comment