JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

வீட்டிலேயே உடல் எடையை குறைக்க எளிய குறிப்புகள்: பெரும்பாலான மக்கள் எடை அதிகரிப்பால் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
எடை அதிகரிப்பதற்கு உங்கள் உணவே முக்கிய காரணமாகும். அன்றாட வாழ்க்கையில் தேவை இல்லாத, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது உங்கள் உடலில் தவறான விளைவை ஏற்படுத்துகிறது. அதிக எடை அதிகரிப்பால் பல நேரங்களில் பலர் பல சங்க்கடங்களுக்கு ஆளாவது உண்டு. அதிகரிக்கும் எடையை குறைப்பது அனைவருக்கும் பெரிய சவாலாகவே உள்ளது. உடலில் உள்ள கொழுப்பை குறைக்க பல வித முயற்சிகளை எடுக்கிறோம்.
பலர்உடல் எடையை குறைக்கஜிம் செல்கிறார்கள். ஆனால், சிலரால் தொடர்ந்து ஜிம்முக்கு செல்ல முடிவதில்லை. சிலருக்கு ஜிம் சென்றாலும் எடை குறைவதில்லை.
ஜிம்மிற்குச் செல்வதன் மூலம் மட்டுமே எடை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியும் என்றில்லை. என்னதான் ஜிம் சென்றாலும், யோகா, உடற்பயிற்சிகள் செய்தாலும், உணவில் கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியமாகும். சில குறிப்பிட்ட உணவுகளை உட்கொள்வதன் மூலம், ஆரோக்கியமாகவும் இருக்கலாம், எடையையும் எளிதாகக் குறைக்கலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
பழங்கள் சாப்பிடுங்கள்
உடல் எடையை குறைக்கும் பல பழங்கள் உள்ளன. இவற்றில் வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன. ஆப்பிள் மற்றும் திராட்சை பழங்களில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. பழங்களில்பாதாமியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
விதைகளை உண்ணுங்கள்
உடல் எடையை குறைக்க, முதலில் உங்கள் உணவில் விதைகளைச் சேர்க்கவும். அப்படி செய்தால், மிக விரைவில் வித்தியாசத்தை நீங்கள் அறிவீர்கள். கொழுப்பை எரிக்கும் திறன் கொண்ட பல விதைகள் உள்ளன. பூசணி, ஆளிவிதை மற்றும் சியா விதைகளில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி எடை இழப்புக்கு உதவுகின்றன.
ஓட்ஸ் சாப்பிட வேண்டும்
ஓட்ஸில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எடை இழப்புக்கு இது ஒரு சூப்பர்ஃபுட் ஆகும். இதை காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அல்லது பாலுடன் ஓட்ஸ் சாப்பிடலாம். உப்பு சேர்க்கப்பட்ட ஓட்ஸில் காய்கறிகளைச் சேர்த்தும் சாப்பிடலாம்.
பனீர் சாப்பிடுங்கள்
வீட்டில் இருந்தபடியே உடல் எடையை குறைக்க பனீரை உட்கொள்ளலாம். பனீர் புரதம் நிறைந்தது, எனவே எடை இழப்பு உணவில் இதை சேர்த்துக்கொள்வதன் மூலம் எடையை எளிதாகக் குறைக்கலாம். இதனை உட்கொள்வதால் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். காலையில் 50 முதல் 100 கிராம் பனீரை உட்கொள்ளலாம்.
காலை உணவில் இட்லி சாம்பார்
காலை உணவுக்குஇட்லி மிகச்சிறந்ததாக கருதப்படுகின்றது. இதில் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆண்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. செரிமானத்தை மேம்படுத்துவதோடு, இது எடையைக் குறைக்கவும் உதவுகிறது. சுரைக்காய், முருங்கைக்காய், கத்தரி, வெண்டைக்காய், முட்டைக்கோஸ் என பல வகையான காய்கறிகளை சாம்பாரில் சேர்ப்பதால், நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வு இருக்கும்.
No comments:
Post a Comment