JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழ்நாட்டில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2 முதன்மை தேர்வு குளறுபடி குறித்து புதிய தகவல் வெளியிட்டுள்ளனர். கேள்விவினாத்தாள் அச்சடிக்கப்பட்ட இடத்தில் நடந்த தவறுகளே குளறுபடிகளுக்கு முக்கிய கரணம் என டிஎன்பிஎஸ்சி விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் அரசு பணிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த போட்டித் தேர்வுகள் ஒவ்வொரு நிலையிலான பணிக்கும் ஒவ்வொரு போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், தமிழக அரசு துறைகளில் 5,446 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கு கடந்த மே மாதம் 21-ம் தேதி குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய தேர்வுகள் நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் 186 தேர்வு மையங்களில் 51,071 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னையில் 32 தேர்வு மையங்களில் 8,315 பேர் தேர்வு எழுதினர். இந்த சமயத்தில் தேர்வர்களின் பதிவெண்கள் மாறியிருப்பதால் தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. குரூப் 2 தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட மையங்களில் கூடுதல் நேரம் வழங்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்திருந்தது.
தமிழ்நாட்டில் 25.02.2023 அன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தொகுதி இரண்டுக்கான முதன்மை தேர்வு ஏராளமான குளறுபடிகளுடன் மிகவும் தாமதமாக தொடங்கியது. பல தேர்வு மையங்களில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததுதான் இக்குழப்பத்திற்கும் தாமதத்திற்கும் காரணமாகும். பல இடங்களில் தேர்வர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, அவற்றின் பதிவு எண்கள் தவறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தேர்வர்களுக்குரிய பதிவெண்ணுடன் வினாத்தாள் சரியாக எடுக்கப்படாமல் இருந்தது குளறுபடிக்கு காரணம் என தகவல் அளித்துள்ளனர். வெளி மாநிலங்களில் வினாத்தாள்கள் அச்சிடப்பட்ட நிலையில் அவற்றை அடுக்கியதில் குளறுபடி நடந்துள்ளது. வினாத்தாள் அச்சிட டெண்டர் எடுத்த நிறுவனம், வேறு நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் வழங்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. டெண்டர் எடுத்த நிறுவனத்தை கருப்பு பட்டியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் வெளியிட்டுள்ளனர். சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்வில் ஏற்பட்ட குளறுபடி குறித்து டி.என்.பி.எஸ்.சி செயலாளர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது குளறுபடி குறித்து டி.என்.பி.எஸ்.சி விளக்கமளித்துள்ளது.
No comments:
Post a Comment