தமிழ்நாடு காவல்துறையில் 6 மாத செய்முறை பயிற்சியை நிறைவு செய்துள்ள 631 காவலர்கள், மார்ச் 1 ஆம் தேதி, தமிழ்நாட்டின் பல்வேறு காவல்நிலையங்களில் நேரடி உதவி ஆய்வாளர்களாக பொறுப்பேற்க உள்ளனர்.
தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 2019 ஆம் ஆண்டு, தமிழ்நாடு காவலர் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 631 நேரடி ஆண் மற்றும் பெண் உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பல்வேறு கட்ட தேர்வுகளுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட 631 உதவி ஆய்வாளர்களுக்கும், 2022ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் 2023ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி வரை 6 மாத செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சிக்காக அவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு காவலர் பயிற்சி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது அவர்கள் 6 மாத செய்முறை பயிற்சியை முடித்துள்ளனர். இதனால் மார்ச் 1ம் தேதி முதல், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் நேரடி உதவி ஆய்வாளர்களாக அவர்கள் அனைவரும் பொறுப்பேற்க உள்ளனர். இதற்கான உத்தரவை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளார்.
No comments:
Post a Comment