Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, February 4, 2023

8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. நகர்புற மருத்துவ நிலையங்களில் வேலைவாய்ப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் ( பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை) கீழ் செயல்படும் நகர்ப்புற மருத்துவ நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை மாவட்ட சுகாதார சங்கம் மூலமாகத் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Medical Officer, Health Inspector,Health worker/support Staff ஆகிய பணியிடங்கள் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ.60 ஆயிரம் வரை சம்பளம் வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயதுசம்பளம்
Medical Officer2540ரூ.60,000/-
Health Inspector2535ரூ.14,000/-
Health worker/support Staff2545ரூ.8,500/-


கல்வித்தகுதி:

பதவியின் பெயர்கல்வி
Medical Officerஇளங்கலை மருத்துவர் படிப்பு (MBBS)
Health Inspector12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 வருட அனுபவம்
Health worker/support Staff8 ஆம் வகுப்பு மற்றும் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பப்படிவங்களைத் திருச்சிராப்பள்ளி துணை இயக்குநர் சுகாதரப்பணிகள் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக்கொள்ளலாம். மேலும் அதனைப் பூர்த்தி செய்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.


தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
ரேஸ்கோர்ஸ் ரோடு, ஜமால் முகம்மது கல்லூரி அருகில்,
T.V.S.டோல்கேட், திருச்சிராப்பள்ளி - 620 020.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 08.02.2023 மாலை 5 மணி வரை.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News