JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

நாம் தினமும் பூண்டை நாம் உண்ணும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருகிறோம் .இந்த பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டாகும் .குறிப்பாக வெறும் வயிற்றில் சாப்பிடும்போது ஜீரண சக்தி அதிகமாகும் .மேலும் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கரைப்பதில் பூண்டு பெரும் பங்கு வகிக்கிறது .
சுகர் பேஷண்டுகள் தங்களின் உடலில் உள்ள சுகரை கட்டுப்பாட்டில் வைக்க பூண்டு உதவுகிறது மேலும் ரத்த அழுத்தம் மற்றும் வயிற்று பிரச்சினைகள் குணமாகிறது ,மேலும் கல்லீரல் சிறப்பாக செயல்பட பூண்டு உதவுகிறது
மேலும் மன அழுத்தம் கட்டுப்பட்டு இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் காக்கிறது .ஆனால் இவ்வளவு சிறப்பு வாய்ந்த பூண்டை சாப்பிடுவது சிலருக்கு சில உபாதைகளை உண்டாக்கும் ,அது என்னவென்று பார்க்கலாம்

1.சிலருக்கு அசிடிட்டி பிரச்சனை இருந்து தொல்லை கொடுக்கும் .அப்படி அசிடிட்டி உள்ளவர்கள் பூண்டு சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் ஏற்படும் வாய்ப்புள்ளதால் அவர்கள் அதை தவிர்க்க வேண்டும்.
2. மேலும் சிலருக்கு அடிக்கடி வயிறு கோளாறு உண்டாகும் .இப்படி பலவீனமான வயிறை கொண்டவர்களுக்கு பூண்டு சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அவஸ்தை படலாம்
3.சிலர் மூச்சுத்திணறல் மற்றும் உடல் துர்நாற்றம் வந்து அவஸ்தை படுவது உண்டு ., அப்படிப்பட்டவர்கள் பூண்டு சாப்பிடுவதைத் தவிர்த்து வந்தால் ஆரோக்கியம் மேம்படும்
4.இதய நோய் உள்ளவர்கள் பூண்டை அளவாக சாப்பிடுதல் நலம் சேர்க்கும் .அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் சில தீய விளைவுகளை உண்டு பண்ணும்
No comments:
Post a Comment