நம் பாரம்பரிய மருத்துவத்தில் ஓமம் ஒரு சிறப்பான மூலிகையாகும். பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை ஓமத்தை பயன்படுத்தலாம்.
இதில், அடங்கியுள்ள எண்ணற்ற மருத்துவ குணங்களை தெரிந்துக்கொள்வோம்
ஓமத்தில் தாமிரம் , அயோடின், மாங்கனீசு, தியாமி, கார்போஹைட்ரேட், கொழுப்பு புரதம், நார்ச்சத்து, டானின்கள், கிளைகோசைடுகள், சபோனின்கள், ஃபிளாவோன், கோபால்ட் மற்றும் ரைபோஃப்ளேவின் போன்ற பண்புகள் நிறைந்துள்ளன. குழந்தைகள் பிறந்தால் ஓமநீர் உள்ளுக்கு தருவார்கள் அது குழந்தைகளின் வாயு உபாதை, செரியாமை பசியின்மை போன்றவைகளை உடனடியாக சரிசெய்யும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை பயன்படுத்தலாம்.
ஓமம் கார்ப்புச்சுவையும் வெப்பத்தன்மையும் கொண்டது. பசியைத் தூண்டும், வாயுவை அகற்றும், அழுகலகற்றும், வெப்ப முண்டாக்கும், உடலை பலமாக்கும், உமிழ்நீரைப்பெருக்கும், ஓமத்தை உணவில் சேர்த்துக்கொண்டுவர, அஜீரணம், வயிற்று உப்புசம், அதிசாரம், சீத பேதி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும். இதேபோல், பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த ஓம நீர் உடலுக்கு பலவித நன்மைகளைச் செய்கிறது. ஓம நீரின் பலன்களைத் தெரிந்துகொள்வோம்.
ஓமத்தை தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்தவுடன் குடிக்கலாம்.
இதனால், கொழுப்பு குறைந்து தொப்பையை குறைக்க உதவுகிறது. மேலும், ஓமம் தண்ணீர் குடிப்பதால், வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குகின்றன. கால் தேக்கரண்டி ஓமம் சேர்த்து வறுக்கவும். நன்கு பொரியும்வரை வறுத்து பின்னர் அதோடு அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். அரை கப் தண்ணீர், கால் கப் தண்ணீர் ஆகும்வரை கொதிக்க வைக்கவும் இள மஞ்சள் நிர ஓம நீரை இறக்கி வடிகட்டவும். பெரியவர்கள் ஓம நீரை அப்படியே அருந்தலாம். குழந்தைகளுக்கு சுவை சேர்க்க இதில் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்த வைக்கலாம்.
ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்றவற்றை சரி செய்வதற்கும் ஓம நீரைப் பயன்படுத்தலாம். காற்றின் மாசுவினால் ஏற்படும் சுவாசப் பிரச்னைகளுக்கு ஓமம் சிறந்த மருந்தாக உள்ளது. ஓமத்தை ஈரத் துணியில் கட்டி நுகர்ந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும். முகம் புத்துணர்ச்சி பெறும்.கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் செரிமானக் கோளாறுகளை சரி செய்ய ஓம நீர் பயன்படுகிறது.
வாயு, வயிற்றுப் பிடிப்பு, மலச்சிக்கல் ஆகிய உடல் உபாதைகளுக்கு ஓம நீர் சிறந்த மருந்து. பாலூட்டும் தாய்மார்களுக்கு ஓம நீர் நல்ல ஆற்றலைத் தரும். வறட்டு இருமல் போன்ற தொந்தரவிற்கும் ஓமம் மருந்தாக உள்ளது
மாதவிடாய் சுழற்சி சரிவர இயங்கவும் பெண்களின் சிறுநீர் கழிக்கும் பாதையை கெட்ட பாக்டீரியா தொற்றின்றி சுத்தமாக வைத்துக்கொள்ளவும் இது மிக உதவியாக இருக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும். அடிவயிற்று வலி ஓம நீரை அருந்தினால் சரியாகும். அல்சர், கேஸ்ட்ரைடிஸ் உள்ளிட்ட வயிற்று உபாதைகளுக்கும் ஓமம் சிறந்த மருந்தாக இருக்கும். தினசரி ஒரு கிளாஸ் ஓம நீர் அருந்துவது உடலின் பலவித நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
No comments:
Post a Comment