Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 19, 2023

எலும்புகளை வலிமையாக்கும் இந்த அரிசி




மற்ற அரிசிகளை காட்டிலும் அதிக சத்துக்களை கொடுக்க கூடியது குதிரை வாலி அரிசி

இந்த குதிரைவாலியில் கோதுமையில் இருப்பதை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது,மேலும் இதன் கதிர்கள் விளைந்த பின்னர் குதிரை வாலை போல இருப்பதால் இதற்கு இந்த குதிரை வாலி என்று பெயர் வந்தது .இதை தொடர்ந்து சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு நார்மலாக இருக்கும் ,மேலும் செரிமான பிரச்சினை ,ரத்த சோகை போன்ற நோய்கள் வராமலும் ,வந்தால் அந்த பிரச்சினை அதிகமாகாமலும் காக்கும் திறன் கொண்டது ,மேலும் உடலில் சளி அதிகமாகி காய்ச்சல் கண்டவர்க்கு இந்த அரிசியை சமைத்து கொடுக்கலாம் ,மேலும் இந்த ஜுரம் போன்ற நோய்கள் வராமல் நோய் எதிர்ப்பு சக்தியை இது கொடுக்கும் மேலும் இதய நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும் .மேலும் இது உடலில் இருக்கும் தேவையற்ற உப்பை குறைக்கும் ஆற்றல் கொண்டது ,மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்



1.குதிரைவாலி அரிசியில் பாஸ்பரஸ் , சுண்ணாம்பு சத்து அதிகளவில் காணப்படுகிறது.

2.இந்த குதிரைவாலி அரிசியை சமைக்கும் போது கால்சியம் பாஸ்பேட்டாக மாறுகிறது. இதனால் தினசரி உணவில் குதிரைவாலி அரிசியை சமைத்து சாப்பிடும் போது எலும்புகள் வலிமை பெறும்

3.மேலும் நம் பற்களும் உறுதி பெரும்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News