
மனிதனாக பிறந்து விட்டால் உழைத்து சாப்பிட வேண்டும் .அந்த உழைப்புக்கு உடலுக்கு எனெர்ஜி தேவை .அந்த எனெர்ஜியில் இரும்பு சத்து குறைபாடு உண்டானால் உடல் அடிக்கடி சோர்வு அடைந்து விடும் ,அப்படி உடல் சோர்வு உண்டாகாமல் இருக்க சில வகை காய்கள் உதவுகிறது ,அந்த காயில் முக்கியமானது கோவக்காய் ,இந்த கோவக்காய் ஒரு அற்புதமான உணவு வகை .இதை தொடர்ந்து எடுத்து கொண்டால் கிட்னி கற்கள் தோன்றாது ,செரிமான பிரச்சினை வராது ,இதயம் முதல் கல்லீரல் வரை பலமாக இருக்கும் .உடல் எடை குறைக்க நினைப்போர் இதை தொடர்ந்து எடுக்கலாம் .மேலும் கோவக்காய் மூலம் கிடைக்கும் அற்புதங்கள் பற்றிய பதிவு இது
1.வாரத்தில் இருமுறை கோவக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை செய்து சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீர்ந்து காலைக்கடன் சுலபமாக போகும் .

2.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், கோவக்காயை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வருவது உடல் எடையை கணிசமாக குறைக்க உதவும்.
3.சர்க்கரை நோய் உள்ளவர்கள் அடிக்கடி கோவக்காய் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்து ஆரோக்கியமாக வாழலாம் .4. வயிற்றில் புற்று நோய் ஏற்படாமல் இருக்க உணவில் அடிக்கடி கோவக்காய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எந்த ஜென்மத்திலும் புற்று நோய் என்ற பேச்சுக்கே இடமில்லை
No comments:
Post a Comment