Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, February 6, 2023

இடுப்பு வலி மூட்டு வலி கழுத்து வலி தாங்க முடியலையா? - இதோ அதற்கான தீர்வு!

முன்பெல்லாம் யாரோ ஒருவருக்கு தான் மூட்டு வலி, கழுத்து வலி, கை கால் சோர்வு பிரச்சனை இருந்தது. ஆனால் தற்போது 25 வயது ஆவதற்கு முன்பே நிறைய பேர் இந்த பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர்.

இதற்கு காரணம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, உடல் உழைப்பு இல்லாதது, இரும்பு சத்து, கால்சியம் சத்து, சுண்ணாம்பு சத்து, குறைபாடு.

இந்த எல்லா பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்யும் அளவு ஒரே வாரம் மட்டும் இந்த பானத்தை தொடர்ந்து குடித்து வாருங்கள். நீங்கள் நினைத்தவாறு உங்கள் உடல் ஒத்துழைக்கும். கால்சியம் குறைபாடு இருக்காது.

அதற்கு முதலில் ஒரு வாணலியில் 100 கிராம் ஜவ்வரிசியை வறுக்கவும். நிறம் மாறும் வரை வறுக்கவும். அடுத்து 100 கிராம் கருப்பு எள்ளை பொரியவிட்டு எடுக்கவும். அடுத்து 200 கிராம் கருப்பு உளுந்தை நிறம் மாறும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து 100 கிராம் பார்லி மற்றும் கொஞ்சம் ஏலக்காய்களை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இவை எல்லாவற்றையும் வறுத்து விட்டு ஆறவிட்டு ஈரம் படாத மிக்சி ஜாரில் அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும். இதனுடன் ஒரு ஸ்பூன் சுக்கு தூளையும் சேர்த்து நன்கு கலக்கி ஒரு காற்று புகாத பாட்டிலில் சேமித்து வைக்கவும். இதை வெளியில் வைத்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தலாம்.

ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் அரைத்த பவுடரை எடுத்துக் கொண்டு அதில் சிறிது தண்ணீர் விட்டு கரைக்கவும். ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பாலை ஊற்றி சூடானதும் அதில் கரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும்.

லேசாக ஆறியதும் ஒரு டம்ளரில் ஊற்றி ஒரு ஸ்பூன் நாட்டு சர்க்கரை கலந்து பருகலாம். இதை வடிகட்டக்கூடாது. இந்த பானத்தை ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால் எலும்பு தேய்மானம் கால்சியம் குறைபாடு போன்ற பிரச்சனைகள் வரவே வராது. உடலில் உள்ள சுண்ணாம்பு சத்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியமாக மாறும்.

No comments:

Post a Comment