பத்திரப்பதிவு கட்டணம் 4%-லிருந்து 2%-ஆக குறைப்பு
நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவு கட்டணம் நான்கு சதவீதத்திலிருந்து இரண்டு சதவீதமாக குறைக்கப்படும் - நிதி அமைச்சர்
செப்டம்பர் 15 முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்
தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு செப்டம்பர் 15-ம் தேதி முதல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்தநாளில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக ரூ.7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வீடு கட்ட அரசு ஊழியர்களுக்கான கடன் ரூ.50 லட்சமாக உயர்வு
வீடு கட்ட அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும் முன்பணம் ரூ.40 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்படும். ஓய்வூதியதாரர்கள் குடும்ப நலன் கருதி சிறப்புநிதியாக கூடுதலாக ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் - நிதி அமைச்சர்
மின்சார வாரியத்தின் இழப்பு குறைக்கப்பட்டுள்ளது...
தமிழகத்தில் ரூ.77 ஆயிரம் கோடியில் 15 புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மின்சார வாரியத்தின் இழப்பு ரூ.11 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.7 ஆயிரம் கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள்...
ராணிப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகள் புதிதாக அமைக்கப்படும். இதன் மூலம் 32 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் - நிதி அமைச்சர்
4 சிப்காட் பூங்காங்கள் மூலம் 22000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்...
விருதுநகர், வேலூர், கோவை ஆகிய இடங்களில் ரூ.410 கோடி செலவில் 4 சிப்காட் பூங்காங்கள் அமைப்பதன் மூலம் 22000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். - நிதி அமைச்சர்
சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு ரூ.55 கோடி ஒதுக்கீடு!
சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு ரூ.55 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா கொள்கை ஒன்றையும் அறிமுக்கப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் மற்றும் சிறப்பு நிவாரணத்திட்டத்துக்கான பணிகளுக்கு ரூ.389 கோடி நிதி ஒதுக்கீடு..
மாநகராட்சிகளில் இலவச இணைய சேவை வழங்கப்படும்..!
சென்னை, தாம்பரம் ஆவடி, கோயம்புத்தூர் மதுரை திருச்சிராப்பள்ளி சேலம் மாநகராட்சியில் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை சேவைகள் வழங்கப்படும்.
தகவல் தொழில்நுட்ப நகரங்கள் அமைக்க திட்டம். இந்த நகரங்களில் உலகளாவிய திறன்மிகு பயிற்சி மையங்கள், பொதுபோக்கு அம்சங்கள் ஆகியவை அமைக்கப்படும்.
பூந்தமல்லி - கோடம்பாக்கம் மெட்ரோ ரயில்
பூந்தமல்லி முதல் கோடம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் செயல்பாடு 2025-ல் நடைமுறைப்படுத்தப்படும்.
மகளிரின் கட்டணமில்லா பயணத்துக்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு
மகளிரின் கட்டணமில்லா பயணத்திட்டத்துக்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகரில் ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும்
விருதுநகரில் ஜவுளிப்பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் கூட்டுப் பங்களிப்புடன் இந்த ஜவுளிப்பூங்க அமைக்கப்படும்.
அண்ணாசாலையில் 4 வழி மேம்பாலம் அமைக்கப்படும்.
தேனாம்பேட்டை முதல் சைதாபேட்டை வரை ரூ.621 கோடி செலவில் 4 வழிச்சாலை
கோவையில் ரூ.9,000 கோடி செலவில் மெட்ரோ அமைக்கப்படும்.
கோவையில் அவிநாசி சத்தியமங்கல் சாலை உள்ளிட்ட இடங்களில் ரூ.9,000 கோடி செலவில் மெட்ரோ அமைக்கப்படும்.
அவிநாசி சாலை முதல் சத்தியமங்கலம் வரை மெட்ரோ ரயில்தடம் அமைக்கப்படுகிறது.
1000 குளங்கள், ஊரணிகள் ரூ.800 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்...
தமிழ்நாட்டில் கிராம பகுதிகளில் 10,000 குளங்கள் ஊரணிகள் ரூ.800 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்
மரகாணத்தில் பன்னாட்டு பறவைகள் சரணாலயம், ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு
217 செயற்கை பவளப்பாறைகள் அமைக்க திட்டம். அதற்காக 79 கோடி நிதி ஒதுக்கீடு
மீனவர்கள் நலனுக்கு ரூ.392 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லின் கூட்டு குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரூ.7145 கோடி செலவில் செயல்படுத்தப்படும்
மதுரையில் ரூ.8500 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம்
மாநிலத்தில் ரயில் போக்குவரத்து திட்டங்களின் பங்கு குறைவாக இருப்பதால் மேம்படுத்துவதற்கு ரயில்வே துறையுடன் இணைந்து புதிய ரயில் போக்குவரத்து திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ. 9000 கோடி ஒதுக்கீடு. சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் ரூ.8500 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
வடபழனி, திருவான்மியுர், வியாசர்பாடி பணிமனைகள் முதல்கட்டமாக மேம்படுத்தப்படும்.
போக்குவரத்துத் துறைக்கு ரூ.8,056 கோடி நிதி ஒதுக்கீடு!
முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்துக்காக 5,145 கி.மீ தூர சாலைகள் மேம்படுத்த ரூ.2,000 கோடி நிதி
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு ரூ.16,262 கோடி ஒதுக்கீடு
ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சித்துறைக்கு ரூ.22562 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யவும், 500 பேருந்துகளை புதுப்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அண்ணாசாலையில் 4 வழி மேம்பாலம் அமைக்கப்படும்..
சென்னையில் மறுகுடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் நலன்களுக்காக கண்ணகி நகர் உள்ளிட்ட பகுதிகளீல் உடற்பயிற்சி மையங்கள், விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
சென்னையில் சமமான வளர்ச்சியை உறுதி செய்ய வடசென்னை வளர்ச்சித் திட்டம் ஒன்றை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அண்ணாசாலையில் 4 வழி மேம்பாலம் அமைக்கப்படும்.
தீவுத்திடளில் திறந்தவெளி திரையரங்கம் உள்ளிட்ட பல புதிய வசதிகளை மேற்கொள்ள ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வனம் மற்றும் சுற்றுசூழல் துறையில் கீழ் நிதி ஒதுக்கீடு
காலநிலை மாற்றத்தை காப்பாற்றுவதில் மகளிரின் பங்கு மிக முக்கியமானது என்பதை உணர்ந்து 'காலநிலையை காக்கும் வீராங்கணைகள் திட்டம்' உருவாக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதல்கட்டமாக, 500 மகளிர் சுய உதவிக்குழுக்களை தெர்ந்தெடுத்து ரூ.20 கோடி செலவில் அவர்களுக்கு மின்சார ஆட்டோக்கள் வழங்கப்படும். இந்த வாகனங்களின் உதவியுடன் அவர்கள் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவார்கள். இதற்கு மொத்த ஒதுக்கீடாக ரூ.1,248 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவையில் செம்மொழிப் பூங்கா ரூ.172 கோடி ஒதுக்கீடு
கோவையில் செம்மொழி பூங்கா இரண்டு கட்டங்களாக அமைக்கப்படும். இதற்காக ரூ.172 கோடி ஒதுக்கீடு
தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்!
ஈரோடு மாவட்டம் அந்தியூர், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள 80,560 ஹெக்டர் பரப்பளவு உள்ள காடுகளை தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலையமாக அறிவிப்பு. இது 18-வது வனவிலங்கு சரணாலையமாகும். அழிந்துவரும் வனவிலங்குகளை காப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
கட்டட வரைபட அனுமதியை இனி இணையதளத்தில் பெறலாம்!
கட்டட வரைபட அனுமதி மற்றும் மனை வரைபட அனுமதியை இணைய வழியில் பெற புதிய இணையதளம் உருவாக்கப்படும்
விவசாயக் கடன் தள்ளுபடிக்கு ரூ.2393 கோடி ஒதுக்கிடு
கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயக் கடன் தள்ளுபடிக்கு ரூ.2393 கோடி ஒதுக்கிடு.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான ரூ.600 கோடி கடன் தள்ளுபடி
ரேஷன் கடைகளில் மானியம்!
ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களுக்கான மானியம் வழங்க ரூ.10,500 கோடி ஒதுக்கீடு
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு வழங்கும் ஊக்கத்தொகையின் காரணமாக உயர்கல்வி சேரும் மாணவிகள் எண்ணிக்கை 29 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
கிராமங்களில் 10,000 நீர்நிலைகளைச் சீரமைக்க ரூ. 800 கோடி
கிராமங்களில் 10,000 நீர்நிலைகளைச் சீரமைக்க ரூ. 800 கோடி
நீர்ப்பாசன வேளாண்மை மேம்படுத்தத் திட்டத்தில் 259 கோடி மதிப்பீட்டில் ஏரிகள் பழுதப்பார்த்தல், சீரமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்படும்.
பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.40 கோடி
15 மாவட்டங்களில் மாற்றுதிறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்
மகளிர் சுய உதவிக்குழு கடன் இலக்கு ரூ.30 ஆயிரம் கோடி...
பெண் தொழில்முனைவோர்கள் புத்தொழில் இயக்கம் ஒன்றை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பெண்கள் தொழில்முனைவில் ஈடுபட்டு வெற்றியடைய அனைத்து விதமான உதவிகளும் இந்த இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும்.
மகளிர் சுய உதவிக்குழு கடன் இலக்கு ரூ.30 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வித்துறைக்கு ரூ.6,967 கோடி...
உயர் கல்வித்துறைக்கு ரூ.6,967 கோடி
பேராசிரியர் அன்பழகன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள் ஆய்வகங்கள் கட்ட ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு
ஆதிதிராவிடர் நலனுக்காக ரூ.3,513 கோடி ஒதுக்கீடு. மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ரூ.100 கோடி செலவில் ஆதி திராவிட மாணவர்களுக்கான புதிய விடுதிகள் கட்டப்படும்.
சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கம் ரூ.25 கோடி செலவில் சீரமைக்கப்படும்'
ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ்: 1,000 மாணவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
புத்துயிர் வண்ணார் நல வாரியத்துக்கு ஊக்கமளிக்க ரூ.10 கோடி நிதி
ரூ.110 கோடியில் 4 மற்றும் 5-ம் வகுப்புக்கு எண்ணும் எழுத்தும் திட்டம்
54 அரசு பால்டெக்னிக் கல்லூரிகளில் ரூ.2,283 கோடி செலவில் திறன்மிகு மையங்கள்
நகர்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் ஆதிதிராவிடர் அயோத்திதாச பண்டிதர்குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் - நிதி அமைச்சர்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு ரூ.1,444 கோடி
மாற்றுத்திறனாளிகள் துறை மிகவும் முக்கியம் என்பதால் முதல்வர் தனது நேரடி கண்காணிப்பில் திட்டங்களைச் செயல்படுத்திவருகிறார். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம், தொழில்பயிற்சி போன்றவற்றை திறம்பட செயல்படுத்திவருகிறார். 6.84 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை ரூ.1000 லிருந்து 1500 உயர்த்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1500 லிருந்து ரூ.2000 ஆக ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் கடன் உதவி, வட்டி மானியம் போன்ற சலுகைகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழிற்பயிற்சி வழங்க ரூ.50 கோடி ஒதுக்கீடு..
தமிழகத்தைச் சேர்ந்த படைவீரர்கள் குடும்பத்துக்கு வழங்கப்படும் கருணைத்தொகை ரூ.40 லட்சமாக உயர்வு.
மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்குவதற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு
மதுரையில் கலைஞர் நூலகம் ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வரும்.
வரும் 2023-2024-ம் நிதி ஆண்டில் 10 லட்சம் மாணவர்களுக்கு தொழில்பயிற்சி வழங்க வேண்டும் என தி.மு.க அரசு உறுதி பூண்டுள்ளது. - நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா...
வரும் ஆண்டில் 10 கோடி மதிப்பில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய திருவிழா நடத்தப்படும். சர்வதேச புத்தக கண்காட்சி வரும் நிதி ஆண்டிலும் நடத்தப்படும்
குடிமைப்பணியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை...
குடிமைப்பணி தேர்வுகளில் தேர்ச்சி பெரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதனால் குடிமைப்பணியில் தேர்ச்சி பெற்ற 1,000 மாணவர்களுக்கு முதல்நிலை தேர்வுக்கு தயாராக ரூ.7,500 உதவித்தொகையும், முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் 1,000 மானவர்களுக்கு ரூ.25,000 உதவித்தொகையும் வழங்கப்படும். - அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
உயர்கல்வி துறைக்கு ரூ.6967 கோடி ஒதுக்கீடு...
உயர்கல்வி துறைக்கு ரூ.6967 கோடி ஒதுக்கீடு.
சமூக நீதியையும் சமுத்துவக் கொள்கையையும் கொண்டுள்ள இந்த அரசு ஆதிதிராவிட பழங்குடியின மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளைத் திட்டமிட்டுவருகிறது. 100 கோடி ரூபாயில் ஆதிதிராவிட பழங்குடியின விடுதிகள் கட்டப்படும்.
குடிமைப்பணி தேர்வுகளில் தேர்ச்சி பெரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதனால் குடிமைப்பணியில் தேர்ச்சி பெற்ற 1,000 மாணவர்களுக்கு முதல்நிலை தேர்வுக்கு தயாராக ரூ.7,500 உதவித்தொகையும், முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் 1,000 மானவர்களுக்கு ரூ.25,000 உதவித்தொகையும் வழங்கப்படும்.
தொழிற்பயிற்சி மையங்கள் புதுப்பிக்கப்படும்...
அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
கிருஷ்ணகிரியில் உள்ள சூளகிரி சிப்காட் மேம்படுத்தப்படும்
ரூ.110 கோடியில் 4,5ம் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்.
ரூ.120 கோடி செலவில் சென்னை அம்பத்தூரில் உலகளாவிய பயிற்சி மையம்.
இளைஞர்களுக்கு தொழிற்சாலைகளில் திறன் பள்ளிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 10 லட்சம் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கப்படும். சென்னை அம்பத்தூரில் இளைஞர்களுக்கான நவீன வசதிகளுடன் பயிற்சி மையம் அமைக்கப்படும்.
மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகம் வருகிற ஜூன் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் உறுதி.
தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி மையங்கள் ரூ.2,877 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்.
சீர்மரபினர் இந்து சமய அறநிலைத்துறை பள்ளிகளும் பள்ளி கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்படும்
சென்னை கிண்டியில் கலைஞர் கருணாநிதி பெயரில் பல்நோக்கு மருத்துவமனை. இந்த ஆண்டே திறக்கப்படும் - அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
1000 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
குடிமைப்பணி முதன்மை தேர்வுக்குத் தயாராகும் 1000 மாணவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்...
4, 5 வகுப்பு மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
இனி அனைத்து துறைகள் நடத்தும் அனைத்து பள்ளிகளுமே பள்ளிக்கல்வி துறையின் கீழ் கொண்டுவரப்படும்
மருத்துவம் திட்டம் விரிவுப்படுத்தப்படும்...
அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யபப்ட்டுள்ளது.
கிண்டியில் கருணாநிதி பெயரில் பன்னோக்கு மருத்துவமனை நடப்பாண்டிலேயே கட்டப்படும்.
211 தொழிற்சாலைகளில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் விரிவுப்படுத்தப்படும்.
மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.18661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் விரிவுபடுத்தப்படும்.
தமிழ் வளர்ச்சி துறைக்கான அறிவிப்பு...
தமிழகத்தில் தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்.
தாளமுத்து நடராஜனுக்கு சென்னையில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்
தமிழ் மொழி உலகம் மொழியாக திகழ பண்பாட்டு மாநாடு நடத்தப்படும்
தொழில்நுட்பத் துறையில் தமிழ் மொழியை வளர்க்க பண்பாட்டு தமிழ் மாநாடு நடத்தப்படும்.
வயது முதிர்ந்த 590 அறிஞர்களுக்கு இலவச பேருந்து பயண பாஸ் வழங்கப்படும்.
சென்னை சங்கமம் கலை விழா மேலும் 8 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்
நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்
590 அறிஞர்களுக்கு இலவச பேருந்து பயண பாஸ்...
தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும். மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராஜனுக்கு நினைவிடம் அமைக்கப்படும்.
வயது முதிர்ந்த 590 அறிஞர்களுக்கு இலவச பேருந்து பயண பாஸ் வழங்கப்படும்.
இலங்கை தமிழர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்துக்கு ரூ.223 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. -அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
அம்பேத்கரின் படைப்புகள் தமிழில் மொழிப்பெயர்க்கப்படும்...
அம்பேத்கரின் படைப்புகள் தமிழில் மொழிப்பெயர்க்கப்படும். நாட்டுப்புற கலைகளை மேம்படுத்தவும் அவற்றை காப்பாற்றவும் நாட்டுப்புற கலை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். சென்னை சங்கமம் கலைநிகழ்ச்சி மேலும் 8 நகரங்களில் நடத்தப்படும். -நிதியமைச்சர்
சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
துறைவாரியான வரவு செலவு திட்ட அறிக்கை யை வாசித்துவருகிறார் நிதியமைச்சர்..
தமிழ்நாடு பட்ஜெட் 2023-24 நிதியமைச்சர் உரை...
பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய முன்னோடிகளின் வழிகாட்டுதலில் அரசு செயல்பட்டுவருகிறது. ஒவ்வொரு நிதி சார்ந்த நடவடிக்கைகளிலும் நீதியை நிலைநாட்டுவதை அரசு உறுதி செய்துவருகிறது.
மத்திய அரசைவிட தமிழ்நாடு அரசு நிதிப் பற்றாக்குறையை வெகுவாகக் குறைத்திருக்கிறது. வருவாய் பற்றாக்குறையை ரூ.30 ஆயிரம் கோடியாகக் குறைத்திருக்கிறோம். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை சமூகப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தந்து திட்டமிட்டு வருவதோடு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருப்பதை உறுதி செய்துவருகிறது.
அதிகரித்துவரும் பணவீக்கம், தொடரும் ரஷ்யா-உக்ரைன் போர் ஆகியவைப் பொருளாதார வளர்ச்சிக்குச் சவாலாகவே இருந்துவருகிறது
மாதம் 1000 ரூபாய்...
20223 - 24ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட்டில் திமுக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான மாதம் 1000 ரூபாய் குறித்தான அறிவிப்பானது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எரிபொருள் விலையினை கட்டுக்குள் கொண்டு வர, பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எனவே இதற்கான அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு பட்ஜெட் 2023-24
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்னும் சற்று நேரத்தில் பட்ஜெட்டினை சட்டசபையில் தாக்கல் செய்யவுள்ளார். திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் வந்துள்ளனர்.
No comments:
Post a Comment