Follow the THAMIZHKADAL OFFICIAL channel on WhatsApp:
Follow the THAMIZHKADAL OFFICIAL channel on Telegram










Monday, March 20, 2023

சின்னவெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு பாருங்கள்!. உடலுக்கு அவ்வளவு ஆரோக்கியம்!

Add This Number In Your Whatsapp Groups -6379884356




சின்ன வெங்காயத்தில் சல்பர் சத்து மிக அதிகம். சின்ன வெங்காயத்தை சாதாரணமாகவே பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதுஅதனால் இதை உணவில் தினசரி சேர்த்துக் கொள்வதால் உடல் வலிமை பெறும். பருவ கால நோய்த்தொற்றுக்கள் ஏற்படாமல் தவிர்க்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் சின்ன வெங்காயத்தை தேனில் ஊறவைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இன்னும் கூடுதல் நன்மை கிடைக்கிறது.வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் ரத்தத்தை சுத்தப்படுத்த அது உதவுகிறது.

சின்ன வெங்காயம், தேன் இரண்டிலுமே மிக அதிக அளவிலான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் இருப்பதால் உடலில் ஏற்படும் ​அஜீரணக் கோளாறை போக்கும் தன்மை கொண்டது. நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி,ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பையும் வெளியேற்றுகிறது.

உடலில் ஏற்படும் இன்சோம்னியா பிரச்சினையை சின்ன வெங்காயம் தீர்க்கும் தன்மை கொண்டது. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ​நெஞ்சு சளி மற்றும் தொப்பை குறையவும் இவை உதவுகின்றன.

தேன் வெங்காயம் செய்வது எப்படி? ஒரு சுத்தமாக பாத்திரம் அல்லது கண்ணாடி பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் நன்கு தோலுரித்து இரண்டாகக் கீறிய சின்ன வெங்காயத்தைப் போட்டு அது முழுகும் அளவுக்கு தேனை ஊற்ற வேண்டும். இரண்டு நாட்கள் அப்படியே ஓரமாக, கைபடாமல் எடுத்து வைக்க வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து சின்ன வெங்காயத்தில் தேன் நன்றாக இறங்கியிருக்கும். நீங்கள் வைத்ததை விட சற்று நீர்த்துப் போயிருக்கும். ஏனெனில் வெங்காயத்தில் உள்ள நீர்ச்சத்தும் தேனுடன் சேர்ந்து ஊறியிருக்கும்.இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நிறைய பலன்கள் கிடைக்கும்





No comments:

Post a Comment

Popular Feed