JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
CBSE 12th public question paper: 2023ம் கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
வரும் சனிக்கிழமை (11.03.2023) கணித மற்றும் பயன்பாட்டு கணிதம்ம் (Mathematics and Applied Mathematics) பாடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. உயர்கல்வியில் பிஇ, பிடெக் போன்ற பொறியியற் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் கணிதம் பாடத்தில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவது முக்கியமானதாகும்.
எனவே, இந்த தேர்வுக்கு தாயாராகி வரும் மாணவர்கள் கொஞ்சம் அதிகம் சிரத்தை எடுத்து கணித பாடத்தை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும்.
மார்ச் 11ம் தேதி முற்பகல் 10.30 முதல் 1.30 மணி வரை தேர்வு நடைபெறும். 3 மணிநேரம் நடைபெறும் இத்தேர்வில் 80 மதிப்பெண்களுக்கும் விடையளிக்க வேண்டும். வினாத்தாள் A, B, C, D, E என ஐந்து பிரிவுகள் இருக்கும். சிபிஎஸ்இ மதிப்பெண் முறையின் படி, A பிரிவில் இருந்து 20 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். B பிரிவில் இருந்து 10 மதிப்பெண்களுக்கு, C பிரிவில் இருந்து 18 மதிப்பெண்களுக்கு, D பிரிவில் இருந்து 20 மதிப்பெண்களுக்கும், E பிரிவில் இருந்து 12 மதிப்பெண்களுக்கு விடையளிக்க வேண்டும்.
எளிய முறையில் தேர்ச்சி பெற கீழ்காணும் மாதிரி வினாத்தாள்களைக் கொண்டு பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
Mathematics Sample Question Paper Class XII Session 2022-23
Mathermatics Marking Scheme Class XII
Mathematics Question Bank
Applied Mathematics Sample Question Paper Classes XII 2022 -23
Applied Mathematics Marking Scheme
முன்னதாக, கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இயற்பியல் (Physics) மிகக் கடினமாக இருந்ததாக பெற்றோர் மற்றும் மாணவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். 12ம் வகுப்பு பொதுத் தேர்வு என்பது ஒரு தகுதித் தேர்வாக மட்டுமே இருந்து வருகிறது. ஆனால், இயற்பியல் வினாத்தாள் போட்டித் தேர்வுகளுக்கு கேட்கப்படுவது போல் இருந்ததாகவும் வேதனை தெரிவித்தனர்.
இந்நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளின் தேசிய ஆணையம் (National Council of CBSE Schools) என்ற அமைப்பு சிபிஎஸ்இ வாரியத்திற்கு இதுகுறித்து சிபிஎஸ்இ வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து, சிபிஎஸ்இ தேர்வுகள் இயக்கத்திற்கு அனுப்பிய கடிதத்தில், " அனுமதிக்கப்பட்டதை விட இயற்பியல் வினாத்தாள் மிகக் கடினமாக இருந்தது.
மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, விடைத்தாள் திருத்தம் போது தாராளாம போக்கைப் பின்பற்றி மதிபெண்ககள் வழங்கிவிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment