Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 10, 2023

பயிற்சி காலத்தில் உள்ள பேராசிரியர்கள், பிஎச்.டி., வழிகாட்டுனராக பணியாற்ற, யு.ஜி.சி., அனுமதி

பயிற்சி காலத்தில் உள்ள பேராசிரியர்கள், பிஎச்.டி., வழிகாட்டுனராக பணியாற்ற, யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது.

கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்கள், தங்களின் இரண்டு ஆண்டு பயிற்சி காலத்தில், பிஎச்.டி., வழிகாட்டுனராக செயல்பட முடியாது; பயிற்சி நிறைவடைந்து சான்றிதழ் பெற்றால் மட்டுமே, வழிகாட்டுனராக பணியாற்ற முடியும்.

இந்த விதிமுறையால், பிஎச்.டி. வழிகாட்டுனரின் எண்ணிக்கை குறைந்து, ஆராய்ச்சி படிப்புகளின் எண்ணிக்கையும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்னையை தீர்க்கும் வகையில், பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'உயர் கல்வி நிறுவனங்களில் நிரந்தர பணியில் சேரும் ஆசிரியர்கள், தங்களின் பயிற்சி காலத்திலும், பிஎச்.டி., வழிகாட்டுனராக செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது' எனக் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment