பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல் டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன.
டிப்ளமோ மாணவர்களுக்கு செமஸ்டர் முறையிலான தேர்வு நடைமுறையில் உள்ளது. அவர்களுக்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் தேர்வுக்கட்டணத்தை கல்லூரி அலுவலகத்தில் ரொக்கமாக செலுத்தி வருகின்றனர். அரியர் மாணவர்களும் கல்லூரிக்கு நேரில் சென்றுதான் தேர்வுக்கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில், பாலிடெக்னிக் மாணவர்கள் தங்கள் தேர்வுக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் புதிய நடைமுறையை தொழில்நுட்பக் கல்வித்துறை கொண்டுவர உள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து தேர்வுக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
இதுதொடர்பாக தொழில்நுட்பக்கல்வி இயக்கக கூடுதல் இயக்குநர் (தேர்வுகள்) கே.பிரபாகரன் அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'ஏப்ரல் மாதத்தில் இருந்து பாலிடெக்னிக் ரெகுலர் மாணவர்கள் மற்றும் அரியர் மாணவர்கள் தேர்வுக்கட்டணத்தை நேரடியாக ஆன்லைனில் செலுத்த வேண்டும். இதுதொடர்பான விரிவான தகவல் பின்னர் தெரிவிக்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment