இஞ்சி டீ குடிப்பதன் காரணமாக நம் உடலுக்கு கிடைக்க கூடிய நன்மைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம்.இஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள் வயிற்று கோளாறு, அஜீரண பிரச்சனை பல்வேறு பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க அரும் மருந்தாக செயல்படுகிறது அதிகப்படியான ஜிஞ்சரால் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளது.
இதனைப் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.
இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்கள் வயிறு சம்பந்தப்பட்ட கோளாறான செரிமான பிரச்சனை, வாயு பிரச்சனை, மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளிலிருந்து குணமடைய உதவுகிறது. நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருகுவதன் காரணமாக வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் குணமடைய உதவுகிறது. மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகிறது. ரத்த அழுத்தத்தின் காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது. இரத்தத்தில் உள்ள கெட்ட கழிவுகளை வெளியேற்றி சீரான ரத்த ஓட்டத்தை அளிக்கிறது. இதன் விளைவாக மாரடைப்பு வராதவாறு பாதுகாத்துக் கொள்கிறது.
நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது இஞ்சியில் உள்ள ஜின்களால் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதன் விளைவாக சளி,காய்ச்சல்,இருமல் போன்ற தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
இஞ்சியில் உள்ள கால்சியம் சத்துக்கள் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. எலும்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகளான கை, கால் வலி மூட்டு வலி போன்றவற்றில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. இஞ்சி நம் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகளை அளிக்கிறது.
No comments:
Post a Comment