இதய துடிப்பு இல்லையென்றால் நாமும் இல்லை என்று தான் அர்த்தம். அதே சமயம் அளவுக்கு அதிகமாக இதய துடிப்பை நாம் உணரும் போது தான் நாம் மருத்துவரின் உதவியை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
ஆம் மன அழுத்தமாக இருக்கும் போது, உடற்பயிற்சி செய்யும் போது நமது இதயம் வேகமாக துடிக்க ஆரம்பிக்கும். ஆனாலும் சில நேரங்களில் தானாகவே சரியாகிவிடும். இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை. ஒருவேளை உங்களுக்கு ஒழுங்கற்ற இதயத்துடிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
மேலும் பதட்டம் மற்றும் இதயம் தொடர்பான நோய்களாலும் இதயத் துடிப்பு வேகமடைகிறது மேலும் இந்த இரண்டையும் வேறுபடுத்திப் பார்ப்பது மிகவும் சவாலானது. எனவே, நீங்கள் பதட்டமாக உணரும் போதெல்லாம் மற்றும் உங்களுக்கு வேகமாக இதயத் துடிப்பு இருந்தால், நீங்கள் உங்கள் மருத்துவரை அணுக வேண்டும். வேகமான இதயத் துடிப்பின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள உதவும் சில அறிகுறிகள் உங்களுக்காக.
படபடப்பைக் குறிக்கும் முக்கிய அறிகுறிகள்:
ஏட்ரியல் டாக்ரிக்கார்டியா :
இதயத்தின் மேல் அறையில் விரைவான இதயத் துடிப்பு இருக்கும்போது, நோயாளி ஏட்ரியல் டாக்ரிக்கார்டியாவுக்கு உட்படுகிறார். இந்த நிலையில், மார்பின் மேல் பகுதியில் விரைவான இதயத் துடிப்பு உணரப்படுகிறது மற்றும் ஏதோ ஒரு வித அச்ச உணர்வு ஏற்படத் தொடங்குகிறது. இது மட்டுமில்லாமல் இதயத் துடிப்பின் அச்சுறுத்தல் தொண்டை மற்றும் கழுத்து வரை நீள்கிறது. மேலும் மார்பில் வலி மற்றும் இரத்தக் கட்டிகள் கூட தமனிகளில் உறைந்துவிடுவதோடு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். எனவே உங்களுக்கு இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், இந்த வேகமான இதயத் துடிப்பு என்றில்லாமல், இதயத் துடிப்பிற்கான அறிகுறிகள் என்று அறிந்து நீங்கள் செயல்பட வேண்டும்.
நீண்ட நேரம் வேகமான இதயத் துடிப்பு:
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, நம்மில் பலருக்கு சில சமயங்களில் இதயத் துடிப்பு வேகமாக மாறி மாறி வருவதோடு, அது தானாகவே இயல்பாகிவிடும். இந்த நிலை உங்களுக்கு ஏற்பட்டால் நீங்கள் கவலைக் கொள்ள வேண்டாம். மாறாக நீங்கள் தொடர்ந்து பதட்டத்தையும், விரைவான இதயத் துடிப்பையும் உணர்ந்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இது இதய நோயின் அறிகுறிகள் என்பதால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
நெஞ்சு வலி :
படபடப்பு மற்றும் நெஞ்சு வலியுடன் நரம்புத் தளர்ச்சியும் இருந்தால், இவையும் இதய நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். இந்த சூழ்நிலையில், உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம்.
தலைச்சுற்றல் :
இதயத் துடிப்பு மீண்டும் மீண்டும் அதிகரித்து, தலைச்சுற்றல் ஏற்பட்டால், நிச்சயமாக இதயத்தில் ஏதேனும் பிரச்சனை இருப்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த நிலையில், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை உடனடியாக பெற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment