மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 9,212 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) கான்ஸ்டபிள் பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் பதிவு மற்றும் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள நபர்கள் crpf.gov.in/recruitment இல் இந்த பதவிகளுக்கு ஏப்ரல் 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
CRPF கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு 2023 (தொழில்நுட்ப & டிரேட்ஸ்மேன்) மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 9,212 ஆகும். இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பில் ஆண் மற்றும் பெண் இருபாலரும் பங்கேற்கலாம். விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய, CRPF கணினி அடிப்படையிலான தேர்வை ஜூலை 01 முதல் 13, 2023 வரை முதல் கட்டமாக நடத்தும். தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஜூன் 20ஆம் தேதி வழங்கப்படும்.

No comments:
Post a Comment