Join THAMIZHKADAL WhatsApp Group
Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, March 28, 2023

முதுகு இடுப்பு வலி ஒரே வாரத்தில் குணமாக! மூன்று பொருட்கள் போதும்!

Add This Number In Your Whatsapp Groups -6379884356
முதுகு வலி ,இடுப்பு வலி ,கை, கால் வலி, மூட்டு வலி , நீங்க வீட்டு வைத்தியம்.தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் இந்த மூட்டு வலியினால் பிரச்சனையை சந்திக்கின்றனர்.

முந்தைய காலத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டு வலியானது வரக்கூடியதாக இருந்தது. ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த மூட்டு வலியினால் மிகவும் அவதிபடுகின்றனர்.

மேலும் உடலில் போதிய சத்துக்கள் இல்லாத இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக அமைகிறது. கால்சியம் குறைபாடு, சுண்ணாம்பு சத்து குறைபாடு, போன்ற பிரச்சனைகளாலும் இந்த மூட்டு வலி மற்றும் முதுகு வலி, கை கால் வலிகள் ஏற்படக்கூடும். ஒரு சிலர் மருத்துவரை அணுகாமல் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதனால் அவரது உடலுக்கு மேலும் பிரச்சனை வரக்கூடும். இந்த மூட்டு வலி, முதுகு வலி ,கை ,கால் வலிகளை எவ்வித மாத்திரைகளும் இல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு சரி செய்வது என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம்.

முதலில் வெந்தயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் இதில் கால்சியம், பொட்டாசியம் ,மியாசின், புரோட்டின், வைட்டமின் சி, நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. ஒரு ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து ஒரு கடாயில் போட்டுக் கொள்ள வேண்டும். 

பிறகு சீரகம் ஒரு ஸ்பூன் எடுத்து அதனுடன் சேர்த்து கொள்ள வேண்டும். அதனுடன் மிளகு ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த மூன்றையும் லேசாக வறுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடி செய்து கொள்ள வேண்டும். பிறகு 200 மிலி தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஒரு ஸ்பூன் நாம் அரைத்து வைத்திருந்த பொடியை சேர்த்து நன்றாக கலந்து காலை வெறும் வயிற்றிலும் மாலை டீ ,காபி குடிப்பதற்கு முன்பும் குடிக்க வேண்டும். 

இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் இடுப்பு வலி ,கை ,கால் வலி மூட்டு வலி இருக்கும் இடமே தெரியாது. மேலும் இதை எல்லோரும் குடித்தால் நல்ல பலனை தரும்.

No comments:

Post a Comment

Popular Feed