Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 12, 2023

தினமும் ரூ.1,000 ஊதியம்.! வரும் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.! என்னென்ன தகுதிகள்.?



அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர்கள் மூலம் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க ஆற்றுப்படுத்துநருக்கான பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம்‌ அரசு குழந்தைகள்‌ இல்லத்தில்‌ ஆற்றுப்படுத்துநர்கள்‌ மூலம்‌ ஆற்றுப்படுத்துதல்‌ சேவை வழங்க ஆற்றுப்படுத்துநருக்கான 2 பணியிடங்கள்‌ மதிப்பூதிய அடிப்படையில்‌ நிரப்பப்பட உள்ளது. இப்பதவிக்கு விருப்பமுள்ள மற்றும்‌ தகுதியான உளவியல்‌ மற்றும்‌ ஆற்றுப்படுத்துதலில்‌ முதுகலைப்‌ பட்டம்‌ பெற்ற நபர்கள்‌, 25 வயது முதல்‌ 40 வயதுக்குப்பட்ட விண்ணப்பதாரர்கள்‌ அவர்களது விண்ணப்பங்களை உரிய அனைத்து சான்றிதழ்களுடன்‌ 20-04-2023.மாலை 5.30 மணிக்குள்‌ கீழ்காணும்‌ முகவரிக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.

தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ மாவட்ட ஆட்சித்‌தலைவர்‌ தலைமையில்‌ உளவியல்‌ மற்றும்‌ ஆற்றுப்படுத்துதல்‌ வல்லுநர்களை கொண்ட தேர்வுக்‌ குழு மூலம்‌ நேர்முகத்‌ தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும்‌. தேர்வு செய்யப்படும்‌ ஆற்றுப்படுத்துநர்களுக்கு மதிப்பூதியம்‌ மாதத்தில்‌ ஐந்து தினங்களுக்கு (நாளொன்றுக்கு ரூ.1000/- ஆயிரம்‌ மட்டும்‌) வழங்கப்படும்‌. இப்பணியிடம்‌ முற்றிலும்‌ தற்காலிகமானது.

No comments:

Post a Comment