JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

கடக ராசிக்காரர்களுக்கு அடுத்த 12 மாதங்கள் எப்படி இருக்கும்? கடக ராசிக்கு சுபமான ஆண்டாக அமையப்போகிறது.
இதோ அவர்களுக்கான பலன்கள்:
பல ஆண்டுகளாக தேங்கியிருக்கும் சுப காரியங்கள் அனைத்தும் நடைபெறும். எதிர்பார்த்து இதுவரை நடக்காத மாற்றங்கள் எல்லாம் வரிசையாக நடக்கும். கடக ராசியில் பிறந்தவர்கள் பொதுவாக தைரியமானவர்கள். எதையும் கையாளும் ஆற்றல் கொண்டவர்கள்.
புதிய ஆண்டின் தொடக்கத்திலேயே ஸ்தானத்தில் இரண்டிற்கு உடையவனான சூரிய பகவான் பத்தாம் பாகத்திற்கு செல்கிறார். உடன் புதன், ராகுவும் செல்கிறது. குருபகவனும் சேர்ந்து ஏப்ரல் 22 ம் தேதி பெயர்ச்சியடைந்து 10ம் இடத்திற்கு செல்கிறார். பொதுவாகவே பத்தாம் பாகம் அள்ளித்தரும். இதனால் சித்திரை மாதத்தில் பல நன்மைகளை எதிர்பார்க்கலாம்.
அடுத்து வரும் வைகாசி மாதத்தில் சூரியபகவான், 11 ம் பாகத்திற்கு செல்கிறார். அதாவது தனலாபம் அடையும் அற்புதமான மாதமாக அது இருக்கும். ஆனி மாதத்தில் சூரியபகவான் 12 ம் பாகத்திற்கு செல்லும் போது, அதிகப்படியான செலவு செய்யும் மாதமாக இருக்கும். குறிப்பாக சுபச் செலவுகள் ஏற்படும். சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பிற மாநிலங்களுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.
ஆடி மாதத்தில் ஜென்ம ஸ்தானத்தில் சூரியபகவான் பிரயானம் செய்கிறார். புதன் பகவானும் சேர்ந்து பயணம் செய்கிறார்கள். இந்த காலத்தில் பழைய முதலீடுகள் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் இதை நீங்கள் உணரலாம். வாராஹி அம்மனை வழிபடுங்கள், வைரபரை வியாழனின் வழிபடுங்கள்.
ஆவணி மாதத்தில் 2 ம் பாகத்தில் செல்லும் சூரிய பகவான், பொருளாதார வளர்ச்சி, சிறந்த படிப்பு, நியாபக ஆற்றல் தருகிறார். சில உடல் உபாதைகள் தரலாம். அம்பாள் வழிபாடு காரணமாக, அதை தவிர்க்கலாம்.
ஆவணி மாதத்தில் செவ்வாய், புதன், சுக்கிர கிரகங்கள் 2்ம் பாகத்தில் செல்வதால் பொருளாதார ரீதியாக அபரிவிதமான வளர்ச்சி இருக்கும். புரட்டாசி மாதத்திலும் நல்ல வளர்ச்சி இருக்கும். அந்த மாதத்தில் பெருமாளை வணங்குவது நல்லது. நீண்ட நாள் இழுபறி வழக்குகள் நிறைவடையும்.
ஐப்பசி மாதத்தில் நன்மைகள், வளர்ச்சிகள், தொழில் சார்ந்த வளர்ச்சிகள், சுமூக உறவுகள் இருக்கும். கார்த்திகை மாதம் செலவுகள் ஏற்படுத்தலாம். மார்கழியில் சூரியன் 6வது பாகம் செல்வதால், வாடகை சிரமங்கள் ஏற்படலாம்.
தை மாதத்தில் கல்யாண பாக்கியம் தரும். கணவன்-மனைவிகள் பிரிந்திருந்தால் சேர்வார்கள். மாசி மாதம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அஸ்டம சனியாகவும், சூரிய பகவானும் எட்டாவது இடத்தில் செல்வதால் தேவையற்ற அவப்பெயர், கணவன், மனைவி கருத்து வேறுபாடு, சிரமங்கள் தரலாம். வாராஹி அம்மன் வழிபாடு மாற்றம் தரலாம்.
பங்குனி மாதத்தில் முன்பு இருந்த அனைத்து பிரச்னைகளும் தீரும். சோபகிருது புத்தாண்டு கடக ராசிக்கு சிறப்பான ஆண்டாக இருக்கும்.
No comments:
Post a Comment