JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
இந்தியாவில் தற்போது 1,2,5 மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளது.
அந்த வகையில் 35 கிராம் எடை கொண்ட இந்த நாணயத்தை தயாரிப்பதற்கு 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் நிக்கல் மற்றும் 5 சதவீதம் துத்தநாகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த நாணயத்தில் அசோகதூண் முத்திரை மற்றும் தேவ நாகரியில் இந்தியில் சத்தியமேவ ஜெயதே என பொறிக்கப்பட்டிருக்கும்.

இந்த நிலையில் 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு இன்று வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஆல் இந்தியா ரேடியோவில் ஒளிபரப்பாகி வரும் பிரதமர் மோடியின் 'மான் கி பாத்'-இன் 100-வது எபிசோடில் 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment