JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

புதிதாக 157 நர்சிங் கல்லுாரிகளை திறக்க மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதில், 11 கல்லுாரிகள் தமிழகத்தில் அமைய உள்ளன.சுயசார்ப்புபொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில், நாடு முழுதும் புதிதாக 157 நர்சிங் கல்லுாரிகளை திறக்க அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது. இதற்காக, 1,570 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. இந்த புதிய நர்சிங் கல்லுாரி வாயிலாக 15 ஆயிரத்து 700 நர்ஸ்கள் ஆண்டு தோறும் பட்டம் பெறுவர்.
கடந்த, 2014ம் ஆண்டுக்கு பின் திறக்கப்பட்ட மருத்துவக் கல்லுாரி வளாகத்திலேயே இந்த புதிய நர்சிங் கல்லுாரிகள் அமைய உள்ளன.இதில், தமிழகத்தில் மட்டும் 11 நர்சிங் கல்லுாரிகள் அமைய உள்ளன. அவை திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம், அரியலுார், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் வர உள்ளன.மேலும், மருத்துவ துறைக்கு தேவையான உபகரணங்கள் இறக்குமதி செய்யப்படுவதை குறைத்து, அதை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வகை செய்யும், தேசிய மருத்துவ உபகரண கொள்கைக்கும் அமைச்சரவை குழு கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. மருத்துவ உபகரண உற்பத்தி துறை நம் நாட்டில் மிக வேகமான வளர்ச்சி அடைந்து வருகிறது.
கடந்த 2020 நிலவரப்படி, நம் நாட்டின் மருத்துவ உபகரண சந்தையின் மதிப்பு 90 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. உலகளாவிய மருத்துவ உபகரண சந்தையில் அதன் பங்கு 1.5 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், மருத்துவ உபகரண உற்பத்தியில் சுயசார்பு அடைந்து, சர்வதேச சந்தைக்கும் நாம் உபகரணங்களை வினியோகிக்கும் திறனை மெல்ல அடைந்து வருகிறோம்.
உற்பத்தி பூங்காதமிழகம், மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், நான்கு மருத்துவ உபகரண உற்பத்தி பூங்காக்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதில், 1,206 கோடி ரூபாய் மதிப்பிலான 26 திட்டங்களுக்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment