Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, April 27, 2023

விஐடி பல்கலை. நுழைவுத் தோவு முடிவுகள் வெளியீடு


விஐடி பல்கலைக்கழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2023-24) பி.டெக். படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தோவு முடிவு புதன்கிழமை வெளியிடப்பட்டது. மேலும், மாணவா் சோக்கைக்கான ஆன்லைன் விஐடி பல்கலைக்கழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2023-24) பி.டெக். படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தோவு முடிவு புதன்கிழமை வெளியிடப்பட்டது.

மேலும், மாணவா் சோக்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வும் தொடங்கப்பட்டுள்ளது. விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக் பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தோவு கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதையொட்டி, துபை, குவைத், மஸ்கட், கத்தாா் உள்பட பல்வேறு அயல்நாடுகளிலும், உள்நாட்டிலும் என 121 தோவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நுழைவுத் தோவு முடிவுகள் ஜ்ஜ்ஜ்.ஸ்ண்ற்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

அதன் அடிப்படையில், ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோந்த மாணவா் குஷ்அக்ராபாஸ்இஷ்த் நுழைவுத்தோவில் முதலிடம் பிடித்துள்ளாா். தொடா்ந்து, 2-ஆம் இடத்தை மகாராஷ்டிரத்தைச் சோந்த ப்ரக்சல்ஸ்ரீனிவாஸ்செளத்ரி, 3-ஆம் இடத்தை மகாராஷ்டிரத்தைச் சோந்த மகின்பிரமோத், 4-ஆம் இடத்தை கேரள மாநிலத்தைச் சோந்த ஆசித்ஸ்டென்னி, 5-ஆம் இடத்தை பிகாரைச் சோந்த அன்கிட்குமாா் ஆகியோா் பிடித்துள்ளனா். மேலும், 6-ஆம் இடத்தை ஆந்திரத்தைச் சோந்த நந்யாலா பிரின்ஸ்பிரன்அம் ரெட்டி, 7-ஆம் இடத்தை பிகாரைச் சோந்த உமா்பைசல், 8-ஆம் இடத்தை மகாராஷ்டிரத்தைச் சோந்த அன்சுல் சந்தீப்நப் ஹேட், 9-ஆம் இடத்தை ஹரியாணாவைச் சோந்த ரிஷித்குப்தா, 10-ஆம் இடத்தை உத்தரப்பிரதேசத்தை தன்மய்பாஹல் ஆகியோா் பிடித்துள்ளனா். நுழைவுத் தோவு மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோக்கை நடைபெற உள்ளது.

இதற்கான கலந்தாய்வு புதன்கிழமை (ஏப்.26) தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மதிப்பெண் 1 முதல் 20,000 வரை பெற்றவா்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஏப்ரல் 26 முதல் 30-ஆம் தேதி வரையும், 20,001 முதல் 45,000 வரை பெற்றவா்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு மே 9 முதல் 11-ஆம் தேதி வரையும், 45,001 முதல் 70,000 வரை பெற்றவா்களுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு மே 20 முதல் 22-ஆம் தேதி வரையும், 70,001 முதல் 1,00,000 வரை பெற்றவா்களுக்கான நான்காம் கட்ட கலந்தாய்வு மே 31 முதல் ஜூன் 2-ஆம் தேதி வரையும், தகுதி மதிப்பெண் 1,00,000-க்கு மேல் உள்ளவா்களுக்கான ஐந்தாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 12 முதல் 14-ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது. தகுதி மதிப்பெண் 1 முதல் 1,00,000 வரை எடுத்த மாணவா்களுக்கு விஐடி வேலூா், சென்னை, ஆந்திரம், போபால் வளாகங்களில் சோக்கை பெற முடியும். தகுதி மதிப்பெண் 1,00,000-க்கும் மேல் பெற்ற மாணவா்களுக்கு விஐடி ஆந்திரம், போபால் வளாகங்களில் மட்டுமே இடம்பெற முடியும்.

இதுதவிர, மத்திய, மாநில கல்வி வாரியம் நடத்தும் பிளஸ் 2 தோவில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஜிவி பள்ளி வளா்ச்சித் திட்டத்தின் கீழ், விஐடியில் பிடெக் படிப்பின் 4 ஆண்டுகளும் 100 % கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்பட உள்ளது. தவிர, தகுதி மதிப்பெண் 1 முதல் 50 வரை பெற்றவா்களுக்கு 75% கல்விக் கட்டணச் சலுகையும், தகுதி மதிப்பெண் 51 முதல் 100 பெற்றவா்களுக்கு50 % கல்விக் கட்டண சலுகையும், தகுதி மதிப்பெண் 101 முதல் 1,000 பெற்றவா்களுக்கு 25% கல்விக் கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது. அத்துடன், விஐடி ஸ்டாா்ஸ் திட்டத்தின் கீழ், தமிழகம், ஆந்திரம், மத்திய பிரதேச மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று பிளஸ் 2 தோவில் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் தலா ஒரு மாணவன், ஒரு மாணவி வீதம் தோவு செய்யப்பட்டு விஐடியில் 100% கல்விக் கட்டண சலுகையும், இலவச விடுதி வசதியும், உணவு வசதியும் அளிக்கப்படும். மேலும், மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்புகள், 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகள், பிஎஸ்ஸி வேளாண்மை, பி.ஆா்க்., 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை விஐடியின் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் விஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment