JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

உலகிலேயே அமைதியான நபர் தான் வலிமையான மனம் கொண்டவர் ஆவார். எல்லாம் இருந்தும், மன அமைதி மட்டும் இல்லையென்றால் வாழ்க்கை நிறைவானதாக இருக்காது.
கடினமான வாழ்க்கை சூழலில், மனதை அமைதிப்படுத்த 16 எளிமையான வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அது குறித்து பார்ப்போம்.
1. நடைபயிற்சி: நடைபயிற்சி நம் மனதை தெளிவுபடுத்த உதவுகிறது. இது நமக்கு ஒரு வித்தியாசமான பார்வையை வழங்குகிறது.
2. ஈடுபாடு: ஒரு நாள் முழுவதும் நீங்கள் விரும்புவதை செய்ய , விடுமுறை எடுத்துக் கொண்டு ஈடுபாடுடன் செய்யுங்கள்.
3. தாராளமாக இருங்கள்: முன்பின் தெரியாத நபருக்கு ஏதாவது கொடுங்கள். கொடுத்து உதவும் போது, மனதிற்குள் இதமாகவும், சிறப்பாகவும் உணரவைக்கும்.
4. காபி ஷாப் அல்லது பரபரப்பான தெருவில் உட்கார்ந்து உங்கள் சுற்றுப்புற சூழ்நிலையை உள்வாங்குங்கள். நீங்கள் மக்களிடம் பேச வேண்டியதில்லை.
5. கற்றுகொள்ளுங்கள்: நீங்கள் என்ன அனுபவிக்கிறீர்கள் என்பதை ஆராயுங்கள். பிரச்சினைகளை நேருக்கு நேர் எதிர்கொண்டு சமாளிக்க அறிவுப்பூர்வமாக உங்களை தயார்படுத்துங்கள்.
6. நாளைக்காக இன்றே தயாராகுங்கள்: அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலை முந்தைய நாள் மாலை எழுதி வைத்து கொள்ளுங்கள்.
7. பலம்: உங்களிடம் உள்ள 20 பலங்கள் என்னென்ன என்பதை பட்டியலிடுங்கள்.
8. தொடர்ந்து முன்னோக்கிச் செல்லுங்கள்: எதுவாக இருந்தாலும் சிறிய அடிகளை எடுத்து வைத்து கொண்டே இருங்கள். நதி போல ஓடிகொண்டே இருங்கள். ஒரிடத்தில் தேங்குவது பயன் தராது.
9. பழைய பொழுதுப்போக்கை நோக்கி மீண்டும் செல்லுங்கள். உங்களிடம் அவ்வாறு பொழுதுப்போக்கு ஒன்று இல்லையென்றால், புதிய ஒன்றை உருவாக்குங்கள்.
10. முன்னுரிமை : எது முக்கியமானது என்பதை இப்போது முடிவு செய்யுங்கள். கூடுதல் பொறுப்புகள் வேண்டாம் என்று சொல்லுங்கள்.
11. தூக்கம்: போதுமான ஓய்வு எடுத்து கொள்ளுங்கள். ஒவ்வொரு இரவும் 7 முதல் 9 மணி நேரம் தூங்குங்கள்.
12. முட்டாள்தனமாக இருங்கள்: நீங்கள் சிறுவயதில் செய்ததை ஒன்றை செய்யுங்கள். வாழ்க்கையை பெரிதாக எடுத்து கொள்ளாதீர்கள்.
13. அழுகை நல்லது : எல்லா உணர்ச்சிகளை அடக்கி வைக்கும் பழக்கத்தை விடுங்கள். மனம் விட்டு அழுதால், நீங்கள் நன்றாக உணருவீர்கள்.
14. உங்களிடம் நீங்கள் பேசுவதை கவனியுங்கள். எதிர்மறையான சுயபேச்சு நிச்சயம் உங்களுக்கு உதவாது.
15. எழுதும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இது மனதை சுதந்திரமாக வைக்கும்.
16. வாழ்க்கை ஒரு பயணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் கடந்து செல்வது தற்காலிகமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எதுவும் கடந்து போகும்.
No comments:
Post a Comment