JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

இன்றைய கால இளைஞர்கள் அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்வு மற்றும் இளநரை.
இதற்கு தீர்வு காண நாம் பல்வேறு விலை உயர்ந்த ஆயில்களை வாங்கி பயன்படுத்தியிருப்போம். ஆனால், அதற்கான சரியான தீர்வு கிடைத்திருக்காது.
கூந்தல் வறட்சி, பொடுகு பிரச்சனை, முடி உதிர்வு, இளநரை என பல பிரச்சனைகளை போக்கி நீளமான மற்றும் மென்மையான கூந்தல் பெற உதவும் ஹேர் மாஸ்க் ஒன்றினை ஆளி விதைகள், கடலை மாவு மற்றும் தயிர் பயன்படுத்தி தயார் செய்வது எப்படி என இந்த பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள் :
ஆளி விதைகள் - 2 ஸ்பூன்.
கடலை மாவு - 1 ஸ்பூன்.
தயிர் - ஒரு ஸ்பூன்.

செய்முறை :
முதலில் எடுத்துக்கொண்ட ஆளிவிதையினை நன்கு உலர வைத்து பின் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர், சிறிய கோப்பை ஒன்றை எடுத்து அதில் கடலை மாவுடன் இந்த ஆளி விதை பொடி சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும்.
இறுதியாக இதனுடன் போதுமான அளவு தயிர் சேர்த்து பேஸ்ட் போல் கரைத்துக்கொள்ள ஆளி விதை - தயிர் ஹேர் மாஸ்க் தயார்!
எப்படி பயன்படுத்துவது?
முறையாக தயார் செய்த இந்த பேக்கினை கூந்தல் மற்றும் உச்சந்தலைக்கு தடவி நன்கு மசாஜ் செய்யவும். குறைந்தது 4 மணி நேரத்திற்கு இந்த சேர்மத்தை தலையில் விட்டு பின்னர் மிதமான ஷேம்பு உதவியுடன் சுத்தம் செய்துவிடவும்.
பயன்கள் :
ஆளிவிதை மற்றும் கடலை மாவின் கலவையில் தயார் செய்யப்படும் இந்த பேக் ஆனது கூந்தலின் இயற்கை எண்ணெயை தக்க வைத்து, கூந்தலின் பொலிவை காக்க உதவுகிறது.
ஹேர் மாஸ்கில் நாம் பயன்படுத்தும் தயிர் ஆனது, கூந்தலின் ஈரப்பத்தை தக்க வைக்கும் பண்பு கொண்டது. அந்த வகையில் இந்த பேக் ஆனது, கூந்தல் வறட்சி பிரச்சனைகளை போக்கி மிருதுவான கூந்தல் பெற உதவுகிறது.
ஆளி விதை, கடலை மாவு மற்றும் தயிர் கலவையில் தயார் செய்யப்படும் இந்த பேக் ஆனது உச்சந்தலையில் சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்து, தலைமுடி வேர் கால்களை வலுப்படுத்துகிறது. அந்த வகையில் இந்த பேக், உறுதியான மற்றும் நீளமான கூந்தல் பெற உதவுகிறது.
No comments:
Post a Comment