Monday, April 24, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.04.2023

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: புறங்கூறாமை

குறள் எண்: 184
கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்.

பொருள்:
நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு.

பழமொழி :

A sound mind in a sound body

வலுவான உடலில் தெளிவான மனம்

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும். 

2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்

பொன்மொழி :

ஒரே ஒரு முறை நடந்தால் அது தடமாக மாறாது. அதே போல் உங்கள் லட்சியத்தை ஒரே ஒருமுறை நினைப்பதன் மூலம் அடைய முடியாது அதற்கு நீங்கள் உழைக்க வேண்டும்

பொது அறிவு :

  1. உப்பு ஏரிகள் அதிகமாக காணப்படும் மாநிலம் எது? 

 இராஜஸ்தான்.

 2. வடகொரியா தென்கொரியா ஆகியவற்றை பிரிக்கும் கோடு எது? 

 38வது இணை கோடு

ஆரோக்ய வாழ்வு :

உலகத்தின் ஆரோக்யமான பழங்களில் தர்பூசணியும் ஒன்று. அதில் 92% நீர் சத்து இருப்பதால் நாள் முழுவதும் உங்கள் உடலை நீர் சத்துடன் வைத்திருக்க உதவுகிறது. ஒரு கிண்ணம் தர்பூசணி பழங்களில் வெறும் 46 கலோரிகளே உள்ளன. மேலும் இந்த பழத்தை பற்றி நாம் அறிந்திராத உண்மை என்னெவென்றால் இப்பழம் ஒரு எதிர்மறை கலோரி உணவு ஆகும். இது எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்களுக்கு ஏற்ற ஒரு பழம் ஆகும்.


ஏப்ரல் 24


ஜி. யு. போப் அவர்களின் பிறந்தநாள்


ஜி. யு. போப் (George Uglow Popeஏப்ரல் 241820 - பெப்ரவரி 111908கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராகத் தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்குச் சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்



சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் அவர்களின் பிறந்தநாள்

சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் (Sachin Ramesh Tendulkar About this soundஒலிப்பு , பிறப்பு ஏப்ரல் 241973) என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரரும் இந்திய அணியின் முன்னாள் தலைவரும் ஆவார்.[4] துடுப்பாட்ட விளையாட்டில் எல்லா காலங்களில் விளையாடிய வீரர்களில் சச்சின் சிறந்த மற்றும் மிகவும் மதிக்கப்படும் வீரராக பரவலாகக் கருதப்படுகிறார்.[5].[6] இவர் பதினொரு வயதுமுதல் துடுப்பாட்டம் விளையாடி வருகிறார். தனது பதினாறாவது வயதில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 1989 இல் கராச்சியில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டத்தில் முதன்முறையாக விளையாடினார்.[7] ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் முதன்முதலாக இருநூறு ஓட்டங்களை எடுத்தவர் இவர் ஆவார். பன்னாட்டுப் போட்டிகளில் நூறு முறை நூறு (துடுப்பாட்டம்) எடுத்தவரும் இவர் ஆவார். தேர்வுத் துடுப்பாட்டம் , ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே[8] மேலும் பன்னாட்டுச் துடுப்பாட்டப் போட்டிகளில் 30,000 ஓட்டங்களைக் கடந்த ஒரே வீரரும் ஆவார்.




நீதிக்கதை

பொம்மைகள்


ரகு வண்ணத்தாள்களில் சின்ன சின்னதாய் குருவி, கிளி, வாத்து, மயில் என்று பொம்மைகள் செய்து கொண்டிருந்தான். வீட்டிற்குள் நுழைந்த வரதன் மகன் கத்திரியும், தாளுமாக இருந்த கோலத்தைப் பார்த்து மயிர்கால்கள் குத்திட்டு நின்றன. கோபம் தலைக்கு ஏறியது.


படிடா என்றால் படிக்க மாட்டேன் என்கிறாய். எப்பொழுது பார்த்தாலும் கிளியும், வாத்துமா செய்து வீடு முழுவதும் குப்பை போடுவது தான் மிச்சம். ஒரு பைசாவிற்குகூட பிரயோஜனம் இருக்கிறதா? இப்படி இருந்தா எப்படிடா பிழைக்கப் போகிறாய். நாலுபேரைப் போல் நல்லா படிக்கணும், நாளை வேலைக்குப் போக வேண்டும் என்கிற எண்ணமே வராதாடா என்று கோபமாக கத்தியவர்.


ரகு முதுகில் இரண்டு அடி போட்டார். செய்து வைத்திருந்த பொம்மைகளை காலால் எட்டி உதைத்தார்.


ரகுவுக்கு தன்னை அடிக்கும் போது கூட வலிக்கவில்லை. ஆனால் பொம்மைகளை உதைத்தது மனதில் வலித்தது. கலை நயமாக தான் வடித்த பொம்மைகளைப் பார்த்து பாராட்ட வேண்டாம். இப்படி எட்டி உதைக்காமல் இருந்திருக்கலாமே என்று எண்ணி அழுதான் ரகு. தோட்டத்தில் துணிகளை துவைத்து காயப் போட்டுவிட்டு வந்த மேகலா, ஏண்டா ரகு அழுகிறாய் எனப்பதறியபடி உள்ளே வந்தாள். பொம்மைகள் சிதறிக் கிடப்பதையும் தன கணவர் துணி மாற்றிக் கொண்டு இருப்பதையும் பார்த்த மேகலா நிலைமையை புரிந்து கொண்டாள். ரகுவை சமாதானப்படுத்திவிட்டு, கீழே சிதறிக்கிடந்த பொம்மை தாள்களை எடுத்து ஒழுங்குபடுத்தினால் மேகலா.


அந்த சம்பவத்திற்கு பின் ரகுவரன் மனதில் ஒரு வைராக்கியம் வந்து விட்டது. இந்த பொம்மைகளை வைத்து ஏதாவது செய்து சாதிக்க வேண்டும் என்று. அவனுக்கு பக்க துணையாக இருந்தாள் அன்னை மேகலா. காலங்கள் கடந்தன. ஆண்டுகள் பல தாண்டியபோது ஒரு நாள் சென்னையில் நீண்ட வரிசையில் மக்கள் கூட்டம். புதுமையான ஓவியக்கண்காட்சியை காண்பதற்குதான் இவ்வளவு கூட்டம், பார்த்தவர்கள் எல்லாம் பரவசப்பட்டார்கள். பூங்கா, கோவில், மசூதி, தேவாலயம், மலை, மலர்க்காடு இப்படி எண்ணிலடங்கா கண்ணைக் கவரும் இயற்கையாக அமைந்தது போன்ற ஓவியங்கள் கண்ணாடிப் பெட்டிக்குள் அழகாக காட்சி அளித்தது. நல்ல விலைக்கு விற்பனையும் ஆனது.


ரகுவை மட்டும் பாராட்டவில்லை. அவன் பெற்றோரையும் பாராட்டினார்கள். அவன் தந்தையின் மனமோ, கூனிக் குறுகிப் போனது. தன் தவறை எண்ணி அவர் உணர்வுகளை உணர்ந்து கொண்டான் ரகு.


அப்பா என்று அழைத்தான். தன் உணர்வுகளில் இருந்து மீண்டு வந்த வரதன், என்ன என்பது போல் பார்த்தார். பக்கத்தில் வந்த ரகு இந்த அளவிற்கு நான் வளர காரணமே எனது அப்பா, அம்மாவின் ஒத்துழைப்பு தான் என்று பேட்டி கொடுத்தான். அந்த வார்த்தைகளைக் கேட்ட வரதன் நெகிழ்ந்து போனார். படிப்பு மட்டும் உயர்வுக்கு காரணமில்லை. குழந்தைகள் எதை விரும்புகிறார்களோ அந்த துறையில் ஊக்கப்படுத்தினால் அந்த துறையில் அவர்கள் சாதனையாளர்கள் என்றார் வரதன்.


காற்று உள்ள போதே தூற்றிக்கொள் வாழ்த்துக்கள் என கைகுலுக்கி விடைபெற்றார் பேட்டி எடுத்த நண்பர்.

இன்றைய செய்திகள்

24.04. 2023

* 12 மணி நேர பணி சட்டத்துக்கு தொடரும் எதிர்ப்பு: திரும்பப் பெற பல்வேறு கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்.

* தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்.

* மாணவ, மாணவிகளின் நலன் கருதி கூட்டுறவு வங்கிகள் மூலமாக சிறுசேமிப்புத் திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

* ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வணிகரீதியாக இஸ்ரோ செலுத்திய பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் பயணம் வெற்றி.

* வரும் செப்டம்பரில் இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

* இந்த ஆண்டு 10 லட்சம் இந்தியர்களுக்கு விசா: அமெரிக்க அமைச்சர் டொனால்டு லூ தகவல்.

* உலகக் கோப்பை வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 தங்கப்பதக்கம்.

* ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு திரில் வெற்றி.

Today's Headlines

* Continued opposition to 12-hour work law: Various party leaders urge withdrawal.

 * Heavy rain likely in 15 districts of Tamil Nadu: Meteorological Department information.

* Cooperative Minister K.R.Periyagaruppan has said that steps will be taken to start a small savings scheme through cooperative banks for the welfare of students.

* ISRO successfully launched PSLV-C55 rocket from Sriharikota.

 * US President Joe Biden is coming to India in September.

 * Visa for 10 lakh Indians this year: US Minister Donald Lew informs.

 * 2 gold medals for India in Archery World Cup.

 * Bengaluru win by defeating Rajasthan.
 Prepared by

Covai women ICT_போதிமரம்
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application

Back To Top