
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் அனைத்து வகை அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் இளம்பகவத் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: முதலமைச்சரின் காலை உணவு திட்டம் முதற்கட்டமாக 2022-23ம் கல்வியாண்டில் மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டது.
தற்போது இத் திட்டம், அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. முதன்மைக் கல்வி அலுவலர்கள், ஒவ்வொரு வட்டார வளமைய அளவில் ஓர் வட்டார வளமையை ஆசிரியர் பயிற்றுநரை முதலமைச்சரின் காலை உணவுத் திட்டப்பணியை கண்காணிக்க பொறுப்பு அலுவலரை நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறை: இத் திட்டத்துக்கான வழிக்காட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
அனைத்து மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழிகாட்டு நெறிமுறை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பசியின்றி பள்ளிகளுக்கு வருவதை உறுதி செய்ய வலியுறுத்தல், பள்ளி மாணவர்களின் வருகையை அதிகரித்தல் உள்ளிட்டவிற்றை ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment