JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தேசிய திறனாய்வுத் தேர்வில் 298 பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் தருமபுரி மாவட்ட மாணவ, மாணவியா் 5-ஆம் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளனா். தேசிய திறனாய்வுத் தேர்வில் 298 பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் தருமபுரி மாவட்ட மாணவ, மாணவியா் 5-ஆம் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளனா்.
அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் தேசிய திறனாய்வுத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் 33 மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வை 6, 300 மாணவ, மாணவியா் எழுதினா். இந்தத் தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியானது. இதில் தமிழக அளவில் பெரம்பலூா் மாவட்ட மாணவ, மாணவியா் 457 பேர் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனா்.
இதேபோல திருநெல்வேலி மாவட்டம் 450 மாணவ, மாணவியருடன் இரண்டாம் இடமும், தூத்துக்குடி மாவட்டம் 359 மாணவ, மாணவியருடன் மூன்றாம் இடமும், தென்காசி மாவட்டம் 340 மாணவ, மாணவியருடன் நான்காம் இடத்தையும் பெற்றன. தருமபுரி மாவட்டத்தில் 298 மாணவ, மாணவியா் இத்தேர்வில் தேர்ச்சி பெற்று மாநில அளவில் ஐந்தாம் இடத்தை பெற்று சாதனை புரிந்தனா். இந்தத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம்தேர்றும் ரூ.1,000 வீதம் மத்திய அரசு சாா்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. தேசிய திறனாய்வுத் தேர்வில் தருமபுரி மாவட்டம் தமிழக அளவில் 5-ஆம் இடம் பெறுவதற்கு காரணமாக இருந்த அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கு. குணசேகரன் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
No comments:
Post a Comment