Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, April 28, 2023

மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு பயிற்சி: ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் மே 6-ல் தொடக்கம்

ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் சி.ஜி.எல். எனப்படும் ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு தரத்தில் நடைபெறும் தேர்வுக்கான பயிற்சிமே 6-ம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: வருமானவரித் துறை, மத்தியப் புலனாய்வுத் துறை, சரக்கு மற்றும் சேவைத் துறை ஆய்வாளர் உள்ளிட்ட 7,500 மத்திய அரசுப் பணியிடங்களுக்கான முதற்கட்டத் தேர்வை மத்தியப் பணியாளர் தேர்வு ஆணையம் வரும் ஜூலை மாதம் நடத்தவுள்ளது.

பட்டப்படிப்பு முடித்த 27 வயதுக்கு உட்பட்டவர்கள் இத்தேர்வை எழுதத் தகுதியுடையவர்கள் ஆவர். இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு முறையே 3 மற்றும் 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்ச்சி உண்டு.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசுப் பணி பெறுகின்ற வாய்ப்புள்ள இத்தேர்வை எழுதவெற்றியாளர்கள் மற்றும் துறைவல்லுநர்களின் தொடர் வழிகாட்டுதலில் தேர்வர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

பொருளாதார அடிப்படையில் நலிவடைந்தோர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவைச் சேர்ந்ததேர்வர்களுக்கும் 50 சதவீதகட்டண விலக்கு அளிக்கப்படும்.தேர்வுக்குத் தேவையான முழுமையான பாடக்குறிப்பேடுகளும், மாதிரித் தேர்வுகளும் பயிற்சியில் வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் 2165, எல்.பிளாக், 12-வது பிரதான சாலை, அண்ணாநகர் என்ற முகவரியிலோ, 9150466341, 7448814441 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment