Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, April 28, 2023

'டெட்' தேர்ச்சியை பார்க்காமல் இடைநிலை ஆசிரியருக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்


தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் நா.சண்முகநாத,ன் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

இந்த 2023-24 கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் பொது இடமாறுதல் வெளிப்படையாகவும், நேர்மையாகவும், ஒளிவுமறைவு இல்லாமலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஆண்டுகளைப்போல இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் (தாள்-2) தேர்ச்சி பெற்றவர்களை கொண்டுதான் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும் என்ற முடிவு, பதவி உயர்வுக்கு காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு என்ற நிலைப்பாட்டை முழுமையாக கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment