Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, April 12, 2023

தேள் கொடுக்கு செடி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது!.

விஷத்தை முறிக்க கூடியதும், காசநோய் கிருமிகளால் ஏற்படும் கட்டிகள், வலிப்பு, தோல்நோயை போக்க கூடியதுமான தேள் கொடுக்கு செடியை பற்றி பார்க்கலாம்.

சாலையோரங்களில் காணப்படும் தேள் கொடுக்கு செடியானது பெரிய இலைகளை கொண்டது. அழகான மெல்லிய ஊதா நிற பூக்களை உடையது. இதன் பூ, தோடு போல் தொங்கிகொண்டிருப்பதால் குரங்கு தோடு செடி என்ற பெயரை கொண்டுள்ளது. 

தேள்கொடுக்கு செடியின் இலை, பூ, வேர் உள்ளிட்டவற்றில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. தேள்கொடுக்கு செடியானது பாம்பு கடிக்கு மருந்தாகிறது. இலையை மேல்பூச்சு மருந்தாக போடும்பொது தோல்நோய் சரியாகும். 

தேனீராக்கி குடிக்கும்போது இருமல், சளி, காசநோய் சரியாகிறது.

தேள்கொடுக்கு செடியை மழைக்காலங்களில் அதிகளவில் பார்க்கலாம். காக்காய் மூக்கு செடி சென்ற பெயரும் இதற்கு உண்டு. இதன் வேரை பயன்படுத்தி தேனீர் தயாரிக்கலாம்.

வேரை சுத்தப்படுத்தி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். அதனுடன் மிளகுப் பொடி, உப்பு மற்றும் ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். 

இதை வடிகட்டி குடித்தால் பூச்சி, பாம்பு, தேள் கடி விஷம் முறியும். இது பூஞ்சைக் காளான்களால் ஏற்படும் நோயை போக்கும். தேள்கொடுக்கு செடியின் காய்கள் தேள் கொடுக்கு போன்று இருக்கும். 

இரு கொடுக்குகளை கொண்டது. இது புலி நகத்தை போன்று வளைந்து இருக்கும். தேள் கொடுக்கு செடி நுண் கிருமிகளை அழிக்க கூடியது.

இலையை பயன்படுத்தி தீக்காயங்களுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். இலைப்பசையுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலமாக காய்ச்சி பயன்படுத்தவும். இது தீக்காயம், ஆறாத சீல் பிடித்த புண்களை குணமாக்கும். விஷக்கடிக்கு மேல் பூச்சாக பயன்படுத்தலாம். 

தேள்கொடுக்கு செடி காயங்களை ஆற்றக்கூடிய தன்மை கொண்டது. வெட்டுக்காயம் சரியாகும். தீக்காயம் வடு இல்லாமல் ஆறும். இலையை பயன்படுத்தி காசநோய் கிருமிகளால் ஏற்படும் கட்டிகளை சரிசெய்யும் தேனீர் தயாரிக்கலாம். துளிர் இலைகள், திப்பிலி பொடி, மஞ்சள் பொடி, தேன் எடுத்துக்கொள்ளவும்.

2 அல்லது 3 இலைகளுடன் சிறிது திப்பிலி, மஞ்சள் பொடி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் வடிக்கட்டி தேன் சேர்த்து குடிக்கலாம்.

இதனால் காசநோய் கட்டிகள் சரியாகும். தொண்டை வலி இருக்கும்போது 4 நாட்கள் எடுத்து வரும்போது வலி குணமாகும்.ஊதா நிறப்பூக்களை பெற்றிருக்கும் தேள்கொடுக்கு செடி விஷமுறிவாகிறது.

கழுத்து பகுதியில் திரண்டிருக்கும் கட்டிகள் கரையும். நெறி கட்டும் இடங்களில் இலையை பூசுவதால் வீக்கம் சரியாகும். இலையானது வலி நிவாரணியாகவும், வீக்கத்தை குறைக்க கூடியதாகவும் இருக்கிறது. இந்த செடி காசநோய், வலிப்புக்கு மருந்தாகும். நோய் நீக்கியாக அமைகிறது.

No comments:

Post a Comment