Join THAMIZHKADAL WhatsApp Groups
பொதுவாக கோடை காலத்தில் உடல் உஷ்ணம் அதிகமாக இருப்பதாலும் .சரியாக தண்ணீர் போதுமான அளவில் குடிக்காமல் விடுவதாலும் நம் வாயில் புண் உண்டாவது உண்டு .இதற்கு விட்டமின் பி குறைபாடு என்று ஆங்கில வைத்தியத்தில் கூறுவர் .இந்த வாய் புண் இருப்போரால் சரியாக சாப்பிட முடியாது .சரியாக தண்ணீர் குடிக்க முடியாது .எனவே இந்த வாய் புண்ணுக்கு சில ஆயுர்வேத குறிப்புகளை கொடுத்துள்ளோம் .அவற்றை படித்து பார்த்து பயன் பெருங்கள்
1.சிலருக்கு திக்கு வாய் இருந்து ,சரியாக பேச முடியாது ,அவர்கள் தினமும் காலையில் வில்வ இலையை மென்று தின்று வந்தால் வாய் திக்குதல் சரியாகி நன்றாக பேச முடியும்
2.சிலருக்கு வாய்ப்புண் இருந்து பாடாய் படுத்தும் .அவர்கள் ரோஜாப்பூ இதழ்களை அப்படியே சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.
3.மேலும் இந்த வாய் புண்ணுக்கு தேங்காய்ப் பாலுடன் தேனை கலந்து குடித்தால் வாய்ப்புண் ஆறும்.
4.அகத்திக்கீரை மற்றும் மணத்தக்காளி கீரை இரண்டையும் சமைத்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் விரைவில் குணமாகி ஆரோக்கியம் மேம்படும்
5.சிலருக்கு உள் நாக்கில் சதை வளரும் .அவர்கள் பழம்புளியை அரைத்து உள்நாக்கில் தடவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் உள்நாக்கில் சதை வளருவதை தடுக்கலாம்.
6.சிலருக்கு கோடை உஷ்ணத்தால் தொண்டையில் புண் வரும் .இதற்கு பப்பாளி மர பாலை நாக்கு மற்றும் தொண்டை புண்ணுக்கு தடவினால் புண் குணமாகி ஆரோக்கியம் மேம்படும்
No comments:
Post a Comment