JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

நமது உணவு அமைப்பில் ஏலக்காய்க்கு என்று ஒரு தனி சிறப்புண்டு .இதை நாம் சமையலில் வாசனைக்காக மட்டும் சேர்க்க சொல்லவில்லை .இதை உபயோகித்தால் பல்வேறு நோய்களை வர விடாமல் செய்யும் .ஏலத்தின் மூலம் வாய் துர்நாற்றம், இதயம் தொடர்பான பிரச்சனைகள், விக்கல், தோல் தொற்று நோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம் .இரவில் 3 ஏலக்காயை சாப்பிட்டு தூங்கினால் நல்ல உறக்கம் வரும் .மேலும் இது தவிர, கேஸ், அசிடிட்டி, மலச்சிக்கல், வயிற்றுப் பிடிப்பு போன்ற பிரச்சனைகளை இந்த காய் சரி செய்யும் ,மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்
1. முதலில் செரிமான கோளாறு சரி செய்ய ,கைப்பிடியளவு நாவல் இலைக் கொழுந்துடன் நான்கு ஏலம் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
2. இதை ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிட செய்தால் செரிமானக் கோளாறு, மட்டுமல்ல சீதக்காதியும் சரியாகும்.
3. சிலருக்கு வாய் துர்நாற்றம் இருக்கும் .அவர்கள் ஏலக்காயை வெற்றிலையுடன் சேர்த்து உட்கொண்டால் வாய் துர்நாற்றம் நீங்கி வாசனையாக இருக்கும்
4. காப்பி மற்றும் தேனீரில் ஏலக்காய் கலந்து சாப்பிடுவது ருசி மற்றும் மணத்திற்காக மட்டுமல்ல, ஏலக்காய் சேர்த்து குடிப்பதால் அஜீரணக் கோளாறை அடிச்சி விரட்டலாம்
5. சிலருக்கு வறட்டு இருமல், தொண்டை வலி இருக்கும் .இப்படி உள்ளவர்கள் ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு இரண்டையும் சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் குணமாகும்
No comments:
Post a Comment