Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, April 26, 2023

சர்க்கரை நோயாளிகளை காக்கும் பாகற்காய் ஜூஸ்.. ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க!


பாகற்காய் நம்மில் பலருக்கும் பிடிக்காத காயில் ஒன்று. ஆனால், அதில் அளவுக்கு அதிகமான மருத்துவக் குணங்கள் உள்ளது.

குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் நல்லது. ஏனென்றால், இதில் இயற்கையாகவே இன்சுலின் போன்று செயல்படும் ஒரு கலவை உள்ளது. இதை தினமும் பருகி வந்தால் மருந்து உட்கொள்வதை வெகுவாக குறைக்கலாம். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

எனவே தான், சர்க்கரை நோயாளிகள் தினமும் பாகற்காய் ஜூஸ் குடித்தால் நல்லது என கூறப்படுகிறது. அந்தவகையில், பாகற்காய் சாறை குழந்தைகள் குடிக்கும் அளவுக்கு கசப்பு இல்லாமல் எப்படி செய்யலாம் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

​தேவையான பொருட்கள் :

பாகற்காய் - 3.
மாங்காய் (சிறியது) - 1.
இஞ்சி - ஒரு சிறிய துண்டு.
எலுமிச்சை பழம் - ½.
தேன் - 2 ஸ்பூன்.
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.

​செய்முறை :

பாகற்காய் ஜூஸ் தயாரிப்பதற்கு முன்னதாக, பாகற்காயினை தண்ணீரில் கழுவி, பின்னர் தோல் மற்றும் விதை நீக்கி சுத்தம் செய்யவும். பின்னர், இதனை பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

இதையடுத்து, 1 எலுமிச்சை பழத்தில் பாதியை மட்டும் எடுத்து புழிந்து, சாறு எடுத்துக்கொள்ளவும். அதேப்போன்று, கட்டை விரல் அளவிலான இஞ்சி எடுத்து இடித்து அதில் இருந்து சாறை மட்டும் புழிந்து தனியே எடுத்துக்கொள்ளவும்.

இதனிடையே மாங்காயின் கொட்டை நீக்கி சுத்தம் செய்து, ஒரு தேங்காய் துருவி உதவியுடன் பொடியாக துருவி தனியே எடுத்து தயாராக வைத்துக்கொள்ளவும்.

தற்போது பாகற்காய் ஜூஸ் தயாரிக்க, ஒரு மிக்ஸி ஜாரில் தண்ணீருடன் பாகற்காய் துண்டுகளை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். பின்னர், அரைத்த இந்த சாறினை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.

தொடர்ந்து இதேப்போன்று, மாங்காய் துருவல், இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சிறிதளவு தண்ணீருடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.

பின்னர் இந்த சேர்மத்தை, அரைத்து வைத்த பாகற்காய் சாறுடன் சேர்த்து கலந்துவிடவும். தொடர்ந்து இதில் சுவைக்கேற்ப உப்பு அல்லது தேன் சேர்த்து நன்கு கலக்கவிட பாகற்காய் ஜூஸ் ரெடி.

ஊட்டச்சத்து மிக்க இந்த பாகற்காய் ஜூஸ் பருகுவதால் நம் உடலுக்கு தேவையான வைட்டமின், மினரல்கள் கிடைக்கிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் இந்த சாறு, காண்பார்வை மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.

No comments:

Post a Comment