
விழுப்புரம்: "கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டனர்.
'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற திட்டத்தில், முதல்வர், முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருடன் மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இதன்படி, 'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன்படி, விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, விழுப்புரம் செல்லும் வழியில், செங்கல்பட்டு மாவட்டம் பரனூரில் உள்ள தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, மாலை 4 மணியளவில் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள், மீனவர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாட உள்ளார். தொடர்ந்து விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு 3 மாவட்டங்களைச் சேர்ந்த அரசுத் துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மற்றும் கள ஆய்வு நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment