Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, April 24, 2023

கல்லீரல் பிரச்சனை அண்டாமல் இருக்க... தினசரி டயட்டில் சேர்க்க வேண்டிய உணவுகள்!


கல்லீரல் ஆரோக்கியம்: 

கல்லீரல் நமது உடலின் மிக முக்கியமான பகுதியாகும். உடலில் வைட்டமின்கள், கொலஸ்ட்ரால் மற்றும் தாதுக்களின் உற்பத்திக்கு கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

நம் உடலில், புரதங்கள், கொலஸ்ட்ரால் மற்றும் பித்த உற்பத்தி முதல் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை சேமித்து வைப்பது வரை பல முக்கிய செயல்பாடுகளைச் செய்யும் ஆற்றல்மிக்க உறுப்பு கல்லீரல் ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதுமை வரை கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உணவில் சிலவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க என்னென்ன உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியவை!

திராட்சைப்பழம்

திராட்சைப்பழம் ஒரு ஆக்ஸிஜனேற்ற நிறைந்த உணவு. கல்லீரலைப் பாதுகாக்க இது செயல்படுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தைக் குறைத்து செல்களைப் பாதுகாப்பதில் நன்மை பயக்கும். திராட்சையில்பல பயனுள்ள தாவர கலவைகள் உள்ளன. இவற்றில் மிகவும் பிரபலமானது ரெஸ்வெராட்ரோல். இது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அதை தினமும் உட்கொண்டால், கல்லீரலில் உருவாகும் ஆபத்தான திசுக்களின் வளர்ச்சியை நிறுத்தலாம். மறுபுறம், நீங்கள் தினமும் உட்கொண்டால், கல்லீரல் அழற்சியைக் குறைக்கலாம். திராட்சைப்பழம் மற்றும் திராட்சை சாறு கல்லீரலுக்கு சிறந்தது என்பதை உறுதி படுத்தியுள்ளன.

கிரான்பெர்ரி என்னும் குருதிநெல்லி

குருதிநெல்லியை தினமும் சாப்பிட்டு வந்தால், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். இந்த குருதிநெல்லியை உட்கொள்வதன் மூலம் கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை பெருமளவு கட்டுப்படுத்தலாம். மறுபுறம், குருதிநெல்லி, கல்லீரல் புற்றுநோயையும் தடுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். பாலிபினால்கள் அடங்கிய பெர்ரி உணவுகளை சாப்பிடுவது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். மேலும் பெர்ரி சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்திக்கும் நல்லது.

பீட் ரூட்

பீட்ரூட் சாலட் அல்லது சாறு உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதனை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தைத் தடுக்கும். எனவே, தினமும் பீட்ரூட் சாறு குடிப்பதன் மூலம், இந்த கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.

No comments:

Post a Comment