JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
அறிவிப்பு 1:தமிழ்நாட்டில் 1-9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட உள்ளது. மாணவர்களுக்கான கோடை விடுமுறை பள்ளி கல்வித்துறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த 1 மாதத்திற்கு தமிழ்நாட்டில் பள்ளிகள் செயல்பாடாது. 30 நாட்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தேர்வு நடந்தது. 12ம் வகுப்புகளுக்கு தேர்வு கடந்த 3ம் தேதி நிறைவு பெற்றது.
10ம் வகுப்புகளுக்கு தேர்வு கடந்த 30ம் தேதி நிறைவு பெற்றது. இந்த நிலையில் தற்போது அவர்களுக்கு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இவர்களுக்கு ஏற்கனவே விடுமுறை விடப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.
அறிவிப்பு 2 :அடுத்த கல்வி ஆண்டிற்கான பள்ளி திறப்பு மற்றும் செயல்படும் நாட்கள் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி 2023-24ல் பள்ளி வேலைநாட்கள் 216 ஆகும். அதேபோல் விடுப்பு நாட்கள் 150 ஆகும்.
2023-24ம் கல்வியாண்டில் மே 1 முதல் மே 31 வரை 31 நாட்கள் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என அறிவிப்பு வெளியோடைப்ப்ட்டு உள்ளது.
ஜூன் 1ம் தேதி 1-10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும்.
அறிவிப்பு 3:உங்கள் வீட்டில் யாராவது பள்ளி முடித்துவிட்டு கல்லூரி செல்லும் வயதில் இருந்தால், உங்களுக்கு என்று தமிழ்நாடு அரசு முக்கியமான திட்டம் ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் career guidance cells எனப்படும் உயர்கல்வி ஆலோசனை குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவில் தலைமையாசிரியர்கள், உயர் கல்வி வழிகாட்டுதலில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் என்எஸ்எஸ் குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் நிர்வாகிகள் ஆகியோர் இடம்பெறுவர். .
இந்த குழு சார்பாக மாவட்ட அளவில் ஒரு பயிற்சி முகாம் நடத்தப்படும். அந்த பயிற்சி முகாமில் மாணவர்களை எப்படி வழி நடத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்படும். அதன்பின் மாவட்ட அளவிலும், வட்ட அளவிலும் பயிற்சிகள் அளிக்கப்படும். அதை தொடர் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.
மே 6ம் தேதியில் இருந்து மாணவர்களுக்கு நேரடியாக பள்ளிகளில் இது தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்படும். பள்ளிகளில் நீங்கள் உங்கள் மகன் அல்லது மகளுடன் சென்று ஆலோசனை பெற்றுக்கொள்ள முடியும்.
மாணவர்களுக்கான உதவித்தொகை பட்டியல் விவரங்கள், வெளி/ உள் மாநிலம் மற்றும் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளின் பட்டியல், கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறித்த விவரம், எந்த பிரிவில் படித்தால் நல்ல எதிர்காலம் இருக்கும் என்று மாணவர்களுக்கு வழிகாட்டத் தேவையான தகவல்களை இந்த குழு வைத்து இருக்கும்.
பிற மாநிலங்கள் அல்லது மாவட்டங்களில் உள்ள நல்ல கல்லூரிகளில் தங்கள் குழந்தைகளை அனுப்பத் தயங்கும் பெற்றோர்களுக்கு அதற்கு உரிய ஆலோசனைகள் இவர்கள் மூலம் வழங்கப்படும்.
No comments:
Post a Comment