JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

இந்தியாவில் வசிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு குடிமக்களுக்கும் அவர்களது ஆதார் அட்டையில் 12 இலக்க அடையாள எண் கொடுக்கப்படும்.
மேலும் அவர்களின் உயிரியல் அடையாளங்கள் அனைத்தும் அவர்களது ஆதார் அடையாள எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போதைய நிலையில் அரசாங்கத்தின் அனைத்து வகை திட்டங்கள் மற்றும் சலுகைகளை பெறுவதற்கும், ஊதியம் பெறுவதற்கும், வங்கியில் கணக்கு துவங்குதல் போன்ற அனைத்து செயல்களுக்குமே ஆதார் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் சிலருக்கு தங்களுடைய ஆதார் அடையாள அட்டையில் மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவை இருந்தால் அதற்காக முன்னர் காலங்களில் ஆதார் சேவை மையங்களை நோக்கி நாம் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.
அங்கு சென்று நம்முடைய பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், ஈமெயில், மொபைல் நம்பர் ஆகியவற்றை நம்மால் மாற்றிக் கொள்ள முடியும். மேலும் தற்போது உள்ள நிலையில் இரண்டு முறைகளில் நம்மால் ஆதார் அட்டையில் திருத்தங்களை செய்ய முடியும்.உங்களுக்கு அருகில் இருக்கும் ஆதார் சேவை மையத்திற்கு சென்று உங்களது ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பத்தை எடுக்கலாம்.ஆன்லைன் மூலமாக மை ஆதார் செயலியை இன்ஸ்டால் செய்து அதன் மூலம் உங்களது விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்.
No comments:
Post a Comment