Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, April 26, 2023

நிதி நிலைமைக்கு ஏற்ப மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம் - அமைச்சர் அன்பில் மகேஸ்

தேவைக்கேற்ப மற்றும் நிதி நிலைமைக்கு ஏற்ப மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம்.

கண்டிப்பாக மடிக்கணினி வழங்குவோம்.' என பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..

' தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி பன்னிரெண்டாம் வகுப்பு முடிவுகள் மே மாதம் 5ம் தேதி வெளியிட இருந்தோம். ஆனால் 7ஆம் தேதி 'நீட் போர்டு' தேர்தல் நடைபெறுவதால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மே 8ம் தேதி காலை 9 மணிக்கு வெளியிட உள்ளோம்.

கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் பெரிய அளவில் பின்தங்கிய இருந்தது. வீண் செலவுகளை கடந்த கால ஆட்சியில் செய்து இருக்கிறார்கள் என்பதை சி ஏ ஜி அறிக்கை காண்பித்துள்ளது. எங்கள் ஆட்சி அமைந்தது முதல் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகளவில் உயர்த்தி இருக்கிறோம் என பெருமையோடு கூற முடியும். இந்த ஆண்டு 11 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியை தேடி வந்துள்ளார்கள். கடந்த ஆட்சியில் அரசு பள்ளியில் இருந்து 3 சதவீதம் மாணவர்கள் தனியார் பள்ளிக்கு சென்றுள்ளனர்.

கிட்டத்தட்ட 2.18 கோடி ரூபாய் அளவுக்கு தேவையற்ற செலவுகளை செய்துள்ளதாக சிஏஜி அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அதேபோல பட்டியல் இன மக்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்க வேண்டிய வீடுகளை வழங்கவில்லை. வீடுகள் வழங்கியதில் பெரிய நகைச்சுவை என்னவெனில் திருச்சியில் வீடுகள் வழங்கியதில் லட்சத்தீவில் ஒருவர் பயன்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் 2016 ஆம் அண்டு முறைகேட்டில் ஈடுபட்ட 6 அதிகாரிகளை எங்கள் ஆட்சியில் பணியிடை நீக்கம் செய்து இருக்கிறோம். இந்த துறையில் பல்வேறு முறையீடுகளை கடந்த கால அரசு செய்துள்ளது. அதே போல SC,ST மக்களுக்கு செல்ல வேண்டிய நலதிட்டங்கள் அந்த சமூகத்தினருக்கு செல்லாமல் மற்ற சமூகத்தினருக்கு கொடுப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சரை பொறுத்தவரை அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்தும் எண்ணம் இல்லை. கடந்த ஆட்சியில் 1.75 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை. எனவே கடந்த ஆட்சியில் விடுபட்டதையும் சேர்த்து மொத்தமாக 14 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டியது உள்ளது.

தேவைக்கேற்ப மற்றும் நிதி நிலைமைக்கு ஏற்ப மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம். கண்டிப்பாக மடிக்கணினி வழங்குவோம்.' என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment