Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, April 30, 2023

உங்க குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க போறீங்களா? டக்குனு இதை படிங்க.

வரும் கல்வியாண்டில் உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க போகிறீர்கள் என்றால் இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும்.

இதற்கான காலி இடங்களின் எண்னிக்கை சட்டென்று குறைந்து உள்ளது.

இதற்கான முக்கியமான அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இதுவரை 70 ஆயிரம் பேர் தனியார் பள்ளிகளில் இந்த திட்டம் மூலம் சேர விண்ணப்பம் கொடுத்து உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 85 ஆயிரம் பேர் மட்டுமே சேர முடியும். அதில் இந்த 70 ஆயிரம் பேருக்கும் இடம் கிடைத்தால் இன்னும் 15 ஆயிரம் இடங்களுக்கு மட்டுமே இடம் இருக்கும் என்பதால் உடனே விண்ணப்பங்களை தாக்கல் செய்யும்படி அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வியை வழங்க இலவச கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம் தமிழ்நாடு அரசு மூலம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

அரசியலமைப்பு சட்டம் 21-Aஇன் கீழ் இது சட்டமாக இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு முறையான பள்ளியில் நிறைவான, சமமான, தரமான முழுநேரத் தொடக்கக் கல்விக்கான வழங்கப்பட வேண்டும் என்று விதி வகுக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின்படி அரசால் நடத்தப்படும் அரசுப் பள்ளிகளில் எப்போதும்போல அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச கல்வி வழங்கப்படும். அதே சமயம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்க ஆசைப்பட்டால் அதற்கும் வழி ஏற்படுத்திகொடுக்கப்படும்.

இது தொடர்பாக உதவி மைய எண்ணுக்கு 14417 தொடர்பு கொண்டு விவரங்களை பெற முடியும்.

தனியார் பள்ளிகள்:

அதன்படி தனியார் பள்ளிகள் குறைந்தது 25% குழந்தைகளை இந்த திட்டத்தின் கீழ் கட்டணம் இல்லாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவர்களுக்கான கட்டணத்தை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும்.

இந்த தனியார் பள்ளிகளுக்கு கட்டண நிலுவை தொகை 364.43 கோடியை சமீபத்தில்தான் தமிழ்நாடு அரசு விடுவித்தது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி 8000 தனியார் பள்ளிகளில் பள்ளிக்கு தலா 20 - 25 சதவிகித மாணவர்கள் படிக்கின்றனர்.

மொத்தமாக தமிழ்நாடு முழுக்க இந்த திட்டத்தின் கீழ் 3,98,000 மாணவர்கள் இலவசமாக படிக்கின்றனர்.

இவர்களுக்கான கல்வி கட்டணத்தை இதுவரை தமிழ்நாடு அரசே செலுத்தி வருகிறது. நேரடியாக கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு செலுத்தும்.

கட்டணம் இல்லை

இவர்களிடம் தனியார் பள்ளிகள் கட்டணம் எதையும் வசூலிக்க கூடாது. இந்த நிலையில்தான் வரும் கல்வியாண்டில் உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க போகிறீர்கள் என்றால் இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும். இதற்கான முக்கியமான அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டு உள்ளது.

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் (RTE) கீழ் தனியார் பள்ளிகளில் 2023-24 மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியும். மதியம் 1.00 மணி முதல் மே 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

இந்த திட்டம் மூலம் இலவசமாக உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றால் https://rte.tnschools.gov.in என்ற பக்கத்தை பார்வையிடுங்கள்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டாயக் கல்வி என்பது, ஆறு முதல் பதினான்கு வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச தொடக்கக் கல்வியை வழங்குவதும், கட்டாய சேர்க்கையையும், வருகையையும் உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும் என்பதை இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது. 'இலவசம்' என்பது, ஆரம்பக் கல்வியைத் தொடர்வதையும் முடிப்பதையும் தடுக்கும் என்பதால், எந்த ஒரு குழந்தையும் எந்த விதமான கட்டணம் அல்லது கட்டணங்கள் அல்லது செலவினங்கள் செலுத்தப் பொறுப்பாக்காதது ஆகும். தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை இலவச கட்டாயக் கல்வி குழந்தைகளின் உரிமை ஆகும்.

இச்சட்டம் பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தை வயதுக்கு ஏற்ற வகுப்பில் சேர்க்கப்படுவதற்கான ஏற்பாடுகளை வழங்குகிறது. இலவச கட்டாயக் கல்வியை வழங்குவதில் அரசாங்கங்கள், உள்ளூர் அதிகாரிகள், பெற்றோர்கள் ஆகியோருக்கு உள்ள கடமைகளையும் பொறுப்புகளையும், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதி மற்றும் பிற பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளுதலையும் இச்சட்டம் வரையறுக்கிறது, என்று கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment