Sunday, April 30, 2023

பாடாய் படுத்தும் மூட்டு வலிக்கு முடிவு கட்டும் 'சில' உணவுகள்!

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி


முழங்கால் வலி என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. உணவு முறை மற்றூம் தற்போதைய வாழ்க்கை முறை காரணமாக, இளைஞர்களுக்கு கூட இந்த பாதிப்பு மிக அதிகம் காணப்படுகிறது.

அத்தகைய சூழ்நிலையில், இது போன்ற வலிகளுக்கு மருந்து உட்கொள்வது நிவாரணம் கிடைக்கும் என்றாலும், அதற்கு பக்க விளைவுகளும் உள்ளன. அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதோடு வயதுக்கு ஏற்ப முழங்கால் வலி அதிகரிக்கும்.

மூட்டழற்சி (Osteo-Arthritis) என்பது இடுப்பு, முழங்கால், தோள்பட்டை, கைவிரல் மூட்டுகளைப் பாதிக்கும் நாள்பட்ட நோய். இதற்கான முக்கியக் காரணிகள், முதுமை, அதிக உடல் எடை அல்லது உடல் பருமன், முழங்காலில் ஏற்பட்ட காயங்கள், மூட்டில் அதிக அழுத்தம், பலவீனமான கால் தசைகள் ஆகியவை. சில சமயங்களில், பரம்பரை பாதிப்பும் காரணமாக இருக்கலாம். மூட்டு வலி பிரச்சனை தீவிரமாக உள்ளவர்களுக்கு அன்றாட வாழ்க்கை கூட பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும்.

அதனால் உங்கள் உணவில் சில மாற்றங்களை செய்து ஆரோக்கியமான விஷயங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் மூட்டு வலியில் இருந்து நிறைய நிவாரணம் பெறலாம். எனவே மூட்டு, முழங்கால் வலியில் இருந்து விடுபட டயட்டில் சேர்க்க வேண்டிய உணவுகளை அறிந்து கொள்ளலாம்.

ஆக்ஸிஜனேற்ற உணவை டயட்டில் சேர்க்கவும்

மூட்டு பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு பழங்கள், காய்கறிகள்,ஆலிவ் எண்ணெய்போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். அசைவம் சாப்பிடும் பழக்கம் இருந்தால் மீனும் சாப்பிடலாம். இதிலுள்ள ஒமேகா கொழுப்பு அமிலம் மற்றும் விட்டமின் டி வியக்கத்தக்க பலன்களை கொடுக்கும்

வெந்தயம்

வெந்தயம் முழங்கால் வலிக்கு பெரும் நிவாரணம் அளிக்கிறது. இதை உங்கள் தினசரி வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதற்கு, வெந்தயப் பொடியை அரை டீஸ்பூன் அளவு காலையிலும் மாலையிலும் உணவு உண்டவுடன் வெதுவெதுப்பான நீரில் எடுத்துக் கொள்ளவும்.

துளசி

துளசி கீல்வாதத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது, ஏனெனில் இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஸ்பாஸ்மோடிக் பண்புகளைக் கொண்டுள்ளது. முழங்கால் வலியில் நிவாரணம் பெற துளசி டீயை ஒரு நாளுக்கு 3-4 முறை அருந்தலாம்.

இஞ்சி

இஞ்சி சாப்பிடுவது மூட்டு வலி மற்றும் தசைகளுக்கு சிறந்த சிகிச்சை என்று கூறப்படுகிறது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது வலியைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இஞ்சியை வலி நிவாரணியாக பயன்படுத்த, ஒரு டீஸ்பூன் அரைத்த மஞ்சள், ஒரு கப் பாலில் இஞ்சி துண்டுகள் சேர்த்து, அதில் கருப்பு மிளகு ஒரு சிட்டிகை சேர்த்து அதை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வர வேண்டும். அதனுடன் தேன் கலந்து குடித்து வர, விரைவில் வலி நீங்கும்.

உடலில் வைட்டமின் டி குறைபாட்டை நீக்கவும்

மூட்டுகளில் நெகிழ்வுத்தன்மையை பராமரிக்க, உங்களுக்கு நல்ல உணவு மட்டுமல்ல, வைட்டமின் டியும் தேவை. அதனால் தான் தினமும் சிறிது நேரம் வெயிலில் உட்காருங்கள். மாத்திரைகள் மூலம் விட்டமின் டி எடுத்துக் கொண்டாலும், சூரிய ஒளி மிகச்சிறந்த தேர்வாகும். செலவின்றி கிடக்கும் அதன் மகத்துவம் பலருக்கு தெரிவிதில்லை. சூரிய ஒளி உடலில் பட்டாலே, மூட்டு வலியில் இருந்து விடுபடலாம்.

வெல்லம்

நம் உணவில் சர்க்கரைக்கு பதில் வெல்லத்தைப் பயன்படுத்தினால், அது கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பண்புகளைக் கொண்டிருப்பதால், அது உடலுக்கு நன்மை பயக்கும். இது உங்கள் எலும்புகளை பலப்படுத்தும். எனவே, முழங்கால் வலிக்கு வெல்லம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நட்ஸ் / உலர் பழங்கள்:

பல்வேறு நட்ஸ் / உலர் பழங்களை சாப்பிடுவதன் மூலம், உங்கள் மூட்டு வலிக்கு உதவும் பல ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். தினமும் அதை உட்கொள்பவர்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். மேலும் இவை தசை வளர்ச்சியிலும் உதவுகின்றன. நட்ஸ்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. வாதுமைக் கொட்டை, பாதாம், ஆளிவிதையுடன் பைன் கொட்டைகளை தினமும் உட்கொள்ள வேண்டும்.

சில எளிய பயிற்சிகள்

மூட்டு வலி அதிகம் இருந்தால், உணவு பழக்கத்தை சிறிது மாற்றுவதுடன், நீங்கள் தொடர்ந்து பயிற்சிகளும் செய்ய வேண்டும். இதைச் செய்ய, நீங்கள் வீட்டிலேயே சில எளிய ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை செய்யலாம். இதைச் செய்ய, நீங்கள் ஒரு மருத்துவர் அல்லது பயிற்சியாளரிடம் ஆலோசனை செய்யலாம். நினைவில் கொள்ளுங்கள். இந்த பயிற்சிகளை மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகு செய்ய வேண்டும். இதன் மூலம் நீங்கள் எந்த வகையான பக்க விளைவுகள் அல்லது பாதிப்புகளை தவிர்க்கலாம்.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application