JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் வளாகத்தில் வருகின்ற 21ம் தேதி அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன. இவ்வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்த அனைவரும் (வயது வரம்பு: 18-க்கு மேல் 35-க்குள்) கலந்துகொள்ளலாம்.
மேற்படி நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல், சுயவிபரக் குறிப்பு (Resume) நகல்கள் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் 21.04.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை சரியாக 10.00 மணிக்கு நேரில் வருகைபுரிந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment