JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

நம்மில் பலருக்கும் மாங்காய் சாப்பிட மிகவும் பிடிக்கும். உப்பு, காரத்துடன் பார்த்தவுடன் நாவில் எச்சிலை ஊறவைக்கும்.
வெயில் காலத்தில் பச்சை மாங்காய் குளிர்ச்சியை ஏற்படுத்தும். இதிலுள்ள வைட்டமின் C நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இதில் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் மாங்காயை தயிருடன் சேர்த்து சாப்பிடும் போது சர்க்கரையின் அளவு கட்டுப்பட்டு இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது.
மங்காயில் உள்ள வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்து கொலஸ்டிரால் அளவை குறைத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. மாங்காயில் அமில ஆசிட் எனப்படும் செரிமான என்சைம் இருப்பதால் இது எளிதான செரிமானத்திற்கு உதவுகிறது.
இது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. மாங்காய் சாப்பிடும் போது உடலில் உள்ள நச்சுக்களையும், பாக்டீரியா தொற்றுக்களை சரிசெய்து கல்லீரலை பாதுகாக்கிறது.
பச்சை மாங்காயை சாப்பிடுவதன் மூலம் வாயில் உள்ள துர்நாற்றம், ஈறுகளில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவற்றை தடுக்கும்.
மாங்காய் சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
அதே போல் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது வயிற்று கடுப்பு, வயிறு வலி போன்ற போன்ற உபாதைகளும் ஏற்படத்தான் செய்யும்.
No comments:
Post a Comment