JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Saturday, April 29, 2023

விடுமுறை முடிந்து கல்லூரிகள் திறப்பு எப்போது?- கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு..!!

அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்களுக்கும் கல்லூரிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.

அதேபோல அரசு உதவிபெறும், தனியார் சுயநிதிக் கல்லூரி முதல்வர்களுக்கும் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வெயில் காலம் தொடங்கி, மக்களை சுட்டெரித்து வருகிறது.இந்த நிலையில் பள்ளிகள் முன்கூட்டியே தேர்வுகளை நடத்தி, மாணவர்களுக்கு விடுமுறையை அறிவித்து வருகின்றன. கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஜூன் 19-ம் தேதி அனைத்து அரசு, தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது

No comments:

Post a Comment